கோட்டைசுவருக்கு மத்தியில் இரண்டு ஜாம்பவான்கள்… பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ !

சென்னை : பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தற்போது கோட்டை நகரமான மத்தியபிரதேசம் குவாலியரில் நடைபெற்று வருகிறது. சியான் விக்ரமனின் படப்பிடிப்புத்தள போட்டோ வெளியாகி ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டி உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

கல்கியின் காவியம்

கல்கியின் காவியம்

அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன். வரலாற்று புதினத்தை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.

பிரம்மாண்டமாக

பிரம்மாண்டமாக

மிக பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னின்செல்வன் படத்தில் விக்ரம், ஜெய்ராம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், பிரபு, லால், ரியாஸ் கான், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, அஸ்வின், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஏ.ஆர். இசைக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். கலைக்கு தோட்டாதரணி என ஜாம்பாவன்கள் டீம் களமிறங்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும், அதிகரித்துள்ளது.

நட்சத்திர பட்டாளம்

நட்சத்திர பட்டாளம்

அதிலும் குறிப்பாக மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் களமிறங்கியுள்ளதால் யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், சமீபத்தில் இதுகுறித்த தகவலும் வெளியானது. அதன்படி பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், ஆழ்வார்க்கடியனாக ஜெயராம் ஆதித்ய கரிகாலனாக சியான் விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா நடிப்பது உறுதியாகியுள்ளது. மணிரத்னத்தின் ஃபேவரைட் ஹீரோயினான ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இறுதிகட்டபடப்பிடிப்பு

இறுதிகட்டபடப்பிடிப்பு

பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது பரபரப்பாக மத்திய பிரதேசத்தில் நடந்து வரும் ஏற்கனவே, ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவி, தன்னுடைய கதாபாத்திரத்தை முடித்து விட்டதாக கூறியிருந்த நிலையில், அவரை தொடர்ந்து, நடிகர் விக்ரமும் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

விக்ரமுடன் ஒரு க்ளிக்

விக்ரமுடன் ஒரு க்ளிக்

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், சியான் விக்ரம் உடன் இருக்கும் படப்பிடிப்புத்தள புகைப்படத்தை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இவர்கள் பின்னணியில் பெரிய கோட்டை சுவர் உள்ளது.

மகேஸ்வர் கோவிலில்

மகேஸ்வர் கோவிலில்

மத்திய பிரதேசத்தில் நர்மதை நதி பாயும் மகேஸ்வர் நகரில் வந்தியத்தேவன் கார்த்தியும், குந்தவை த்ரிஷாயாவின் காதல் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது. மகேஸ்வர் கோவிலில் புகைப்படத்தை நடிகை தரிஷாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானதை அடுத்து மணிரத்னம் படப்பிடிப்புதளத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். இருப்பினும் த்ரிஷா இவ்வாறுபதிவிட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X