‘மாமன்னன்’ படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய மாரி செல்வராஜ்!

சென்னை : மாமன்னன் படப்பிடிப்பு தளத்தில் மாரி செல்வராஜ் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இயக்குநர் ராமின் உதவி இயக்குநராக பணிபுரிந்த மாரி செல்வராஜ், கற்றது தமிழ், தங்க மீன்கள் மற்றும் தரமணி உள்ளிட்ட படங்களில் பணியாற்றி உள்ளார். சினிமா மீதும் இயக்கத்தின் மீதும் இவருக்கு இருக்கும் அளவு கடந்த காதல், வெகு சீக்கிரத்திலேயே இவரை தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்கள் பட்டியலில் அலங்கரித்துள்ளது.

Director Mariselvaraj Celebrates Birthday in Maamannan shooting spot

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே, தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்கள் வரிசையில், தனக்கென ஒரு தனி இடத்தை மாரி செல்வராஜ் பிடித்துள்ளார். பரியேறும் பெருமாள் திரைப்படத்தை போலவே தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

மாரிசெல்வராஜ் தற்போது உதயநிதியை வைத்து மாமன்னன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பகத் பாசில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் வைகைப்புயல் வடிவேலும் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Director Mariselvaraj Celebrates Birthday in Maamannan shooting spot

38வது பிறந்த நாளை கொண்டாடி வரும் மாரிசெல்வராஜ், மாமன்னன் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். இதில், உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், கலை இயக்குனர் குமார் கங்கப்பன் மற்றும் 'மாமன்னன்' படக்குழுவினர் உடனிருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X