ஆர்யா, கலையரசனுக்கு கடும் பாக்சிங் பயிற்சி... பா.ரஞ்சித்தின் 'சல்பேட்டை பரம்பரை' ஷூட்டிங் ஸ்டார்ட்
சென்னை: பா.ரஞ்சித்தின் 'சல்பேட்டா பரம்பரை' படத்தின் ஷூட்டிங் சென்னையில் நேற்றுத் தொடங்கியது.
தினேஷ் நடித்த அட்டகத்தி படம் மூலம் இயக்குனரானவர் பா.இரஞ்சித். அடுத்து கார்த்தியின் மெட்ராஸ், ரஜினியின் கபாலி, காலா படங்களை இயக்கினார்.
காலாவைத் தொடர்ந்து பழங்குடியினத் தலைவரான பிர்சா முண்டாவின் வாழ்க்கைக் கதையை அவர் படமாக்க இருப்பதாகக் கூறப்பட்டது. நமா பிக்சர்ஸ் இதைத் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

சல்பேட்டா பரம்பரை
இந்நிலையில் அந்த படத்தின் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அவர், சல்பேட்டா பரம்பரை என்ற படத்தை அவர் இயக்குகிறார்.

வடசென்னை
குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட இதன் கதை, வடசென்னையில் நடந்த உண்மைச் சம்பவம் என்று கூறப்படுகிறது. இதில், ஹீரோவாக ஆர்யாவும் கலையரசனும் நடிக்கின்றனர்.

ஆர்யா பயிற்சி
ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்காக, ஆர்யாவும் கலையரசனும் குத்துச் சண்டைப் பயிற்சி பெற்றுள்ளனர்.

படப்பிடிப்பு
கடந்த சில மாதங்களாகக் குத்துச்சண்டைப் பயிற்சிப் பெற்ற இவர்கள், இப்போது ரெடியானதை அடுத்து இதன் படப்பிடிப்பு சென்னையில் நேற்றுத் தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications