twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தலையில் அடித்துக்கொண்டு கதறியப்படி ஓடி வந்த ஷங்கர்.. இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த அந்த பயங்கரம்!

    |

    Recommended Video

    Indian 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து

    சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தை அறிந்த இயக்குநர் ஷங்கர் தலையில் அடித்துக்கொண்டு கதறியப்படி ஓடி வந்த தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேற்று நிகழ்ந்த விபத்து தமிழ் சினிமாத்துறையை மட்டுமின்றி ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்தப்பட்ட கிரேன் திடீரென சரிந்து விழுந்தது. இதில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், புரடெக்ஷன் உதவியாளர் மது ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்தியன் 2 விபத்து: உயிரோடு இருந்து இதை டிவிட்ட ஒரு நொடிதான்.. நூலிழையில் தப்பித்த காஜல் உருக்கம்! இந்தியன் 2 விபத்து: உயிரோடு இருந்து இதை டிவிட்ட ஒரு நொடிதான்.. நூலிழையில் தப்பித்த காஜல் உருக்கம்!

    கிரேன் ஆப்ரேட்டர்

    கிரேன் ஆப்ரேட்டர்

    அவர்களின் மரணம் தமிழ் திரையுலகை உலுக்கியிருக்கிறது. பிரபலங்கள் பலரும் இந்த கோர விபத்து குறித்து தங்களின் வேதனையை பகிர்ந்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய கிரேன் ஆப்ரேட்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரேன் ஆப்ரேட்டர் தலைமறைவாகியிருப்பதாக தெரிகிறது.

    கோர விபத்து

    கோர விபத்து

    இந்நிலையில் நேற்றிரவு 9.30 மணிக்கு ஷுட்டிங்கில் பிரேக் விடப்பட்ட போது இந்த கோர விபத்து அரங்கேறியிருக்கிறது. பிரேக் என்பதால் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், நடிகை காஜல் அகர்வால் ஆகியோர் அப்போதுதான் அங்கிருந்து புறப்பட்டிருக்கின்றனர். அவர்கள் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கிரேன் அறுந்து விழுந்திருக்கிறது.

    கதறிய ஷங்கர்

    கதறிய ஷங்கர்

    இதனை அறிந்த இயக்குநர் ஷங்கர் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு ஓடி வந்துள்ளார். அவ்வளவு எடை கொண்ட கிரேன், தொழில் நுட்ப கலைஞர்கள் நின்றிருந்த பகுதியில் அலங்கோலமாய் விழுந்து கிடந்ததையும் அதற்கு அடியில் ஊழியர்கள் சிக்கியிருந்ததையும் பார்த்த இயக்குநர் ஷங்கர், தலையில் அடித்துக் கொண்டே அய்யோ அய்யோ என கதறியபடி ஓடி வந்துள்ளார்.

    அதிச்சி சோகம்

    அதிச்சி சோகம்

    இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு அடிப்பட்டவர்கள் உடடினயாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தால் அதிர்ச்சியும் சோகமுமாய் உறைந்து போய் இருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

    பெரும் துயரம்

    பெரும் துயரம்

    தகவலை அறிந்த கமல் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று ஊழியர்களை நலம் விசாரித்தார். தேவையான சிகிச்சைகளை தாமதிக்காமல் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கூடவே இருந்த கலைஞர்கள் ஒரு நொடியில் மரணமடைந்தது படக்குழுவினரை பெரும் துயரில் ஆழ்த்திருக்கிறது.

    15 நாட்களுக்கு முன்பு

    15 நாட்களுக்கு முன்பு

    என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது என்று கதறுகின்றனர் உடன் பணிபுரிந்த படக்குழுவினர். உயிரிழந்த உதவி இயக்குநர் கிருஷ்ணா, கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக சேர்ந்திருக்கிறார்.

    English summary
    Director Shankar cried and heading towards the spot after hears the accident in Indian 2 movie shooting.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X