உச்சகட்டம்.. இது வேற மாதிரி படம்ங்க.. 22ம் தேதி ரிலீஸ்!
சுனில்குமார் தேசாயின் இயக்கத்தில் உருவாகியுள்ள உச்சக்கட்டம் திரைப்படம் வரும் 22ம் தேதி ரிலீசாகிறது.
Recommended Video

சென்னை: திரில்லர், திகில் படமாக வெளிவருகிறது உச்சக்கட்டம்.
திரில்லர் படங்களை இயக்குவதில் புகழ் பெற்ற இயக்குனர் சுனில்குமார் தேசாய், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் இயக்கியுள்ள படம் உச்சக்கட்டம். சிங்கம் 3 படத்தில் வில்லனாக நடித்த தாகூர் அனூப் சிங், இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். சாய் தன்ஷிகா, தன்யா ஹோப் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

வேதாளம் படத்தில் நடித்த கபீர் துஹான் சிங் இத்திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஆடுகளம் கிஷோர், ஷ்ரவன் ராகவேந்திரா, வம்சி கிருஷ்ணா, ஷ்ரத்தா தாஸ் ஆகியோரும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒரு புத்தாண்டு தினத்திற்கு முந்தைய 48 மணி நேரத்தில் நடக்கும் பல்வேறு சம்பவங்களின் தொகுப்பு தான் இத்திரைப்படத்தின் கதைக்கரு. ஒரு உல்லாச விடுதியில் நடக்கும் ஒரு கொலை, அதனால் ஏற்படும் குழப்பங்கள், இதன் விளைவாக கதாபாத்திரங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என கதை பயணிக்கிறது. மர்மங்கள் நிறைந்த இந்த படத்தில், கொலை, துரோகம், காதல், காமம், அதிரடி சண்டை காட்சிகள் என முற்றிலுமாக சிலிர்ப்பூட்டும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, சுனில்குமாரின் திரைக்கதை, படத்தை க்ளைமாக்ஸ் வரை விறுவிறுப்பாக வைத்திருக்கும்.

இப்படம் வரும் 22ம் தேதி வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.



Click it and Unblock the Notifications











