»   »  தியாவின் வம்பு சண்டை!

தியாவின் வம்பு சண்டை!

Subscribe to Oneindia Tamil

தியாவுக்கு ஷேவ் செய்யத் துடித்தார் சத்யராஜ். பயந்துடாதேயுங்கோ,படத்துக்காகத்தான்.

வம்புச் சண்ட படத்தில்தான் இந்த லொள்ளுக் காட்சி. இதில் ஜீவானந்தம் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட கேரக்டரில் நடிக்கிறார் சத்யராஜ்.

இவரது நடவடிக்கைகளில் திடீர் வித்தியாசத்தைக் காண்கிறார் மகன் உதய்கிரண்(இவர்தாங்க பொய் பட ஹீரோ). இதையடுத்து மன நல டாக்டரிடம் கூட்டிச்செல்கிறார். அவரை பரிசோதிக்கும் டாக்டர், மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்ஜீவானந்தம் என கன்பார்ம் செய்கிறார். அவருக்கு சிகிச்சை தர வேண்டும். அதற்குமுன்பு மண்டிப் போய்க் கிடக்கும் முடியை வெட்டி டிரிம் ஆக்கிக் கூட்டி வரக்கூறுகிறார் டாக்டர்.

இதையடுத்து அப்பாவை சலூன்-கம்-மசாஜ் பார்லருக்கு கூட்டிப் போகிறார் மகன்உதய். அங்கு ஜீவாவின் தாடி, மீசை மழித்து எடுக்கப்படுகிறது. அப்போது அந்தசலூனுக்கு கும்பலாக அழகுப் பெண்கள் சிலர் முகத்தை பளிச்சிட வைக்கும்ஃபேஷியல் செய்ய வருகின்றனர். அவர்களில் ஒயில் அழகி தியாவும் ஒருவர்.

அவர்களைப் பார்த்து குஷியாகும் ஜீவானந்தம், தியாவுக்கும் ஷேவ் செய் என்றுசலூன்காரரிடம் கூறுகிறார். அவர் மறுக்கிறார். ஜீவாதான் பஞ்சாயத்து பார்ட்டியாச்சே!கத்தியை எடுத்து சலூன்காரரை மிரட்டுகிறார்.

இதைப் பார்த்து ஷாக் ஆகிறார் உதய். காரணம்? தியா, உதய்யின் அன்பான காதலி.

இப்படி ஒரு கலாய்க்கும் காட்சியை சமீபத்தில் படமாக்கினார்கள். கிறுக்கு மச்சான்கேரக்டர் சத்யராஜுக்கு மிக நன்றாகவே பொறுந்திருக்கிறதாம்.

கல்யாணம் பண்ணிக் கொண்டு செட்டிலாகப் போகும் தியா இப்படத்தை வேகமாகமுடித்துக் கொடுத்து வருகிறாராம்.

தியாவின் கவர்ச்சி மழை இந்தப் படத்தில் படு இதமாக பெய்துள்ளதாம். அவர்போதாது என்ற ஒரு சந்திரமுகி என்ற சக்கரைக் கட்டியையும் கூட்டி வந்துள்ளனர்.

படத்தைத் தயாரிப்பது ஏ.வெங்கடேஷ். இயக்குவது சத்யராஜுக்கு மிக வேண்டப்பட்டராஜ்கபூர். பா.விஜய்யின் பாடல்களுக்கு இசை கோர்த்திருக்கிறார் இமான்.

சந்திரமுகியும், சத்யராஜும் சேர்ந்து ஒரு குத்துப் பாட்டுக்கு கும் ஆட்டம்போட்டிருக்கிறார்களாம். அதேபோல தியாவுக்கும், உதய்கிரணுக்கும் ஒரு தித்திப்பானஆட்டத்தையும் கொடுத்து அசத்தியிருக்கிறார்களாம்.

தியாவை (கல்யாணத்துக்கு முன்) கடைசியா பார்த்துக்குங்கோ..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil