சூட்டிங் ஸ்பாட்
தனுஷ் நடிக்க புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்துக்கு பேரலலாகத் தயாராகி வரும் ட்ரீம்ஸ் படத்தில்குண்டக்க மண்டக்க கவர்ச்சி காட்டி வருகிறார் தியா.
என்னங்க இப்படி எக்ஸ்போஸ் செய்றீங்க என்று கேட்டால், சில நேரம், சில கேரக்டர்களுக்கு அப்படி, இப்பிடிநடித்துத் தான் ஆகணும். இதுவும் அப்படிப்பட்ட கேரக்டர் தான். தனுசுக்கு ஜோடியா நடிக்கும்போது கவர்ச்சிகொஞ்சம் தூக்கலா தானே இருக்கனும் என்று வியாக்கினம் பேசுகிறார் தியா.
படப்பிடிப்பை இரண்டு ஷெட்யூல்களில் முடிக்கத் திட்டமிட்டு, முதல் கட்ட படப்பிடிப்பை 40 நாட்களில்
முடித்துவிட்டார்கள். அடுத்து விசாகபட்டிணத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. இதை 30 நாட்களில்முடிக்கப் போகிறார்களாம்.
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்துக்காக வெளிநாட்டில் சுற்றிவிட்டு வந்த தனுஷ், விசாகபட்டிணம் வந்துஇறங்கியவுடன் இரண்டாவது கட்ட சூட்டிங் ஆரம்பாகிவிட்டது. படு விறுவிறுப்பாக சூட்டிங் நடக்கிறது.
இடையிடையே தியாவோடு சென்னை செட்களில் டான்ஸ் காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டன. டான்ஸ்காட்சிகளில் தனுசுடன் தியா காட்டியுள்ள நெருக்கத்தைப் பார்த்து சூட்டிங் டீமே மெய்மறந்துவிட்டதாம்.


Click it and Unblock the Notifications











