»   »  தியாவை மறைத்த மாநகராட்சி

தியாவை மறைத்த மாநகராட்சி

Subscribe to Oneindia Tamil

கிண்ணென்ற உடல் வாகுடன் குறும்பு படத்தில் அறிமுகமான தியா, நீண்டகாலமாக தனுசுடன் நடித்து வந்த ட்ரீம்ஸ் படம் ஒரு வழியார்முடிந்துவிட்டது. இதைத் தொடர்ந்து விஜய்யின் சித்தி மகன் விக்ராந்துடன் கற்க கசடறவிலும் நடித்து வருகிறார் தியா

இடையில் பட வாய்ப்புக்கள் இல்லாமல் வீட்டுக்குள் குந்திக் கிடந்த தியா ஊட்டி உருளைக்கிழங்காய் உப்பிவிட்டார். முதல் படத்திலேயேசமூக பிரஞை சிறிதும் இல்லாமல் இளமை புரட்சி செய்த தியாவுக்கு ட்ரீம்ஸ் படத்திலும் கற்க கசடறவிலும் நடிக்க வாய்ப்பு ஏதும் இல்லை.

காட்டல் வேலையைத் தான் ட்ரீம்சில் செய்தார். அதையே தான் கற்க கசடறவிலும் செய்கிறார். தான் மிக நீண்டகாலமாக எதிரிபார்த்தட்ரீம்ஸ் படம் ஒரு வழியாய் முடிந்தததையடுத்து வடபழனி கோயிலில் அங்கப் பிரதட்சணம் செய்துவிட்டு வந்திருக்கிறார் தியா.

இந்தப் படத்தில் திடீரென பாரு என்ற மும்பை பிகரையும் தனுசுக்கு இரண்டாவது ஜோடியாக்கிவிட்டார்களாம். முதலில் எதிர்த்துப்பார்த்துவிட்டு அமைதியாகிவிட்டாராம் தியா. அந்த மும்பை வரவை ஒடுக்க அவர் யூஸ் செய்தது கவர்ச்சி எனும் பிரம்மாஸ்திரத்தைத்தான். (முதல் படமான குறும்பிலும் நிகிதாவுக்கும் தியாவுக்கும் இதே போட்டி தான் நடந்தது. வென்றது என்னவோ தியா தான்.)

பாடல் கேசட் எல்லாம் ரிலீஸ் ஆகி, படம் தீபாவளிக்கு வெளியீடு என்ற அறிவிப்புடன் ட்ரீம்ஸ் படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடந்துவருகின்றன. படத்தில் தியாவின் போர்ஷன் எல்லாம் முடிந்துவிட்டது.

தற்போது கற்க கசடற படத்தில் விக்ராந்த்துடன் நடித்து வரும் தியாவுக்கும் போட்டியாய் லட்சுமி ராயும் நடிக்கிறார்.


இந்த இருவருக்கும் இடையே நாளுக்கு நாள் போட்டி அதிகமாகிக் கொண்டிருக்கிறதாம். குறும்பு, ட்ரீம்ஸைத் தொடர்ந்து அடுத்த படத்திலும்தனக்குப் போட்டியாய் ஒரு சக்களத்தி ஹீரோயின் வந்துவிட பிச்சுப்புடிவேன் பிச்சு என்று லட்சுமி ராயை தனது மகா சிக்கனமானஆடைகளால் மிரட்டித் தள்ளிவிட்டாராம் தியா.

முதலில் இவருக்கு இணையாக கோதாவில் வந்த லட்சுமி ராய், அப்புறம் தியா போகும் போக்கைப் பார்த்து பயந்து ஜகா வாங்கிக்கொண்டுவிட்டார். இப்படியெல்லாம் ஆடைக் குறைப்பால் அளும்பு செய்யும் தியாவுக்கு பிடித்த உடை, தயவு செய்து நம்புங்கள்,புடவையாம்.

கற்க கசடற படம் தவிர வேறு படம் ஏதும் இல்லாததால் விளம்பரப் படங்களிலும் தியா நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அண்மையில் தியா நடித்த விளம்பரப் படத்தின் ஒரு ஸ்டில் அண்ணா சாலையில் பிரம்மாண்ட பேனராக வைக்கப்பட்டது. அதில் தியாகாட்டியிருக்கும் தாராளம் கொஞ்ச நஞ்சமல்ல. முக்கிய சாலையில் இத்தகைய விளம்பரம் இருந்தால் விபத்துகள் சராமாரியாக நிகழ்வதற்குவாய்ப்பிருப்பதாகக் கருதிய சென்னை மாநாகராட்சி, தியாவின் முக்கியப் பிரதேசங்களை தார் பூசி மறைத்துள்ளது.

அந்த அளவுக்கு தனது அந்தரங்கங்களை அண்ணா சாலையில் குத்தகைக்கு விட்டிருந்தார் தியா.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil