Don't Miss!
- Finance
சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கும் அம்பாசிடர் 2.0.. மீண்டும் உற்பத்தி.. எங்கு தெரியுமா?
- Automobiles
குட்டி குட்டி தெருவா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்.. புதிய மஹிந்திரா பொலிரோ சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!
- News
சர்ச்சை.. பிரதமர் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிற்காத மத்திய அமைச்சர்! மனோ தங்கராஜ் கண்டனம்
- Technology
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 'இந்த' திட்டத்தை தேர்வு செய்தால் ஒரு 425 நாட்களுக்கு பிரச்சனை இருக்காது! எந்த திட்டம்
- Sports
ஐபிஎல் குவாலிபையர் 2 - ராஜஸ்தான், பெங்களூரு இன்று மோதல் - பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கவனக்குறைவால் பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இணையத்தில் வைரலாகும் ‘டான்‘ திரைப்படத்தின் புகைப்படங்கள் !
சென்னை : டான் திரைப்படத்தின் சில பிரத்யேகத் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், குக் வித் கோமாளி சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
செம
ஹாட்
அப்டேட்...
விக்ரமில்
இணையும்
அடுத்த
2
வில்லன்கள்
இவர்கள்
தான்

டான்
டாக்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் டான். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், டப்பிங் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் டப்பிங் செய்யும் போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருந்தார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
ரொமான்டிக் காமெடிப் படமாக டான் தயாராகி வருகிறது. சிவகார்த்திகேயன் இதில் கல்லூரி மாணவராக வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவை கேபிஆர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. சில காட்சிகள் சென்னையிலும், ஆக்ராவில் சில காட்சிகளையும், ஒரு சில பாடல் காட்சியையும் எடுத்துள்ளனர்.

கல்லூரி மாணவன்
இந்நிலையில், டான் திரைப்படத்திலிருந்து பிரத்யேகத் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இப்படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்கும் சிவகார்த்திகேயன் லைப்ரரியில் புத்தகம் படிப்பது போன்ற போட்டோ வெளியாகி உள்ளது.

கவனம் பெரும் புகைப்படம்
நகைக்சுவை மற்றும் காதல் திரைப்படமான இப்படத்தில் சிவாங்கி நடித்துள்ளார். தற்போது வெளியாகி உள்ள புகைப்படத்தில் சிவாங்கி, பிரியங்கா அருள் மோகன் மற்றும் சிவகார்த்தியேன் நடந்து வருவது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.