காரைக்குடியில் ஷுட்டிங்கை முடித்த எதற்கும் துணிந்தவன்... அடுத்து என்ன ?
சென்னை : சூர்யா - பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். வேகமாக தயாராகி வரும் படங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்தின் ஷுட்டிங் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காரைக்குடியில் நடைபெற்று வந்தது.
லேட்டஸ்ட் தகவலாக காரைக்குடியில் கடந்த 51 நாட்களாக நடைபெற்று வந்த எதற்கும் துணிந்தவன் ஷுட்டிங் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை டைரக்டர் பாண்டிராஜ் உறுதி செய்துள்ளார்.
சோஷியல் மீடியாக்களில் இந்த தகவலை பதிவிட்டுள்ள பாண்டிராஜ், எதற்கும் துணிந்தவன் டீமின் கடின உழைப்பையும், நம்ப முடியாத அளவிற்கு போட்ட முயற்சியையும் பாராட்டி உள்ளார். சன் பிக்சர்ஸ், சூர்யா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

கிராமத்து கதையாக உருவாக்கப்பட்டு வரும் எதற்கும் துணிந்தவன் படம் சோஷியல் மெசேஜ் உடன் வெளிவர உள்ளதாம். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுவதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த படத்தில் சூர்யாவிற்கு அழுத்தமான ரோலாம். சமூகத்தில் இருக்கும் பெண்களை காப்பாற்றும் ஒரு கேரக்டரில் தான் சூர்யா நடிக்கிறாராம். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
இவர்களுடன் சூரி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் பெரும்பாலான பகுதி ஷுட்டிங் முடிக்கப்பட்டு விட்டதாம். இன்னும் ஒரு வாரங்கள் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் மட்டும் மீதம் உள்ளதாம். அத்துடன் படத்தின் ஷுட்டிங் முழுவதும் முடிய உள்ளதாம்.
எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்த பிறகு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக ஒரு மாதத்திற்கும் மேலாக காளைகளை கையாள பயிற்சி எடுத்து வருகிறார் சூர்யா. தனது கேரக்டருக்கு ஏற்றது போல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பயிற்சியை எடுத்து வருகிறாராம் சூர்யா.


Click it and Unblock the Notifications











