புஷ்பா படப்பிடிப்பில் குவிந்த ரசிகர்கள்.. காற்றில் பறந்த சோஷியல் டிஸ்டன்ஸ்.. மிரள வைக்கும் வீடியோ!

சென்னை: புஷ்பா படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அல்லு அர்ஜூனை காண குவிந்த ரசிகர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜூன். கடந்த மே மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வந்தார் நடிகர் அல்லு அர்ஜூன்.

கொரோனா பாதிப்பு - நெகட்டிவ்

கொரோனா பாதிப்பு - நெகட்டிவ்

பின்னர் கொரோனாவில் இருந்து மீண்ட அல்லு அர்ஜூன் 15 நாட்கள் குவாரண்டைனுக்கு பிறகு தனக்கு கொரோனா நெகட்டிவ் ஆனதாக தெரிவித்தார். இதனால் சுமார் ஒரு மாதம் தனது குழந்தைகளை பிரிந்து இருந்த அல்லு அர்ஜூன் தனது குவாரண்டைன் முடிந்த பிறகு குழந்தைகளை சந்தித்து கொஞ்சி விளையாடினார்.

மீண்டும் படப்பிடிப்பில் அல்லு அர்ஜூன்

மீண்டும் படப்பிடிப்பில் அல்லு அர்ஜூன்

அந்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் அல்லு அர்ஜூன். தற்போது கொரோன தாக்கம் குறைந்துள்ளதால் மீண்டும் படப்பிடிப்பு பணிகளில் இறங்கியுள்ளார் நடிகர் அல்லு அர்ஜூன். அல்லு அர்ஜூன் தற்போது புஷ்பா படத்தில் நடித்து வருகிறார்.

மலைபோல குவிந்த ரசிகர்கள்

மலைபோல குவிந்த ரசிகர்கள்

இதன் படப்பிடிப்பு காக்கிநாடாவில் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்றார் நடிகர் அல்லு அர்ஜூன். இதனை அறிந்த ரசிகர்கள் அல்லு அர்ஜூனின் காரை சுற்றி வளைத்து ஆரவாரம் செய்தனர். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் அல்லு அர்ஜூனை சூழ்ந்து கொண்டனர்.

காற்றில் பறந்த சமூக இடைவெளி

காற்றில் பறந்த சமூக இடைவெளி

இதனை கண்ட அல்லு அர்ஜூன் தனது ரசிகர்களுடன் கலந்து உரையாடினார். இந்த வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இதனை பார்த்த பலரும் இப்படி சமூக பொறுப்பு இல்லாமல் இருந்தால் கொரோனா மூன்றாவது அலை வெகு விரைவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்து வருகின்றனர்.

சாலையோர கடையில் காலை உணவு

சாலையோர கடையில் காலை உணவு

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் அல்லு அர்ஜூன், சாலையோர கடையில் காலை உணவு சாப்பிட்டார். சாப்பிட்ட பின்னர் கடைக்காரருக்கு காசு கொடுத்தார். அந்த வீடியோ வைரல் ஆனது. ரசிகர்களுடன் இறங்கி உறவாடுவதில் நடிகர் அல்லு அர்ஜூனும் மகிழ்ச்சி அடைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடத்தல்காரராக அல்லு அர்ஜூன்

கடத்தல்காரராக அல்லு அர்ஜூன்

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன் புஷ்பராஜ் என்ற கதாப்பாத்திரத்தில் கடத்தல்காரராக நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

செம்மரக் கடத்தல் குறித்து..

செம்மரக் கடத்தல் குறித்து..

சுகுமார் இயக்கத்தில் உருவாகும் புஷ்பா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. ராயலசீமா மற்றும் ஆந்திர மாநில மலைப் பகுதியான சேஷாச்சலம் வனப்பகுதியில் நடக்கும் செம்மரக் கடத்தல்களை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X