நள்ளிரவில் விஜய்யை காண குவிந்த ரசிகர்கள்
சென்னை: விஜய்யை பார்க்கும் ஆசையில் நள்ளிரவில் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு வந்துள்ளனர் ரசிகர்கள்.
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து காத்துக்கிடக்க வேண்டாம் என்று விஜய் தனது ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும் அவரை காணும் ஆர்வத்தில் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு எல்லாம் செல்கிறார்கள் ரசிகர்கள். வெளியே கூட்டமாக இருக்கும் ரசிகர்களை பார்த்து விஜய் கைசையக்கும் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் காசி மேடு கடற்கரை பகுதியில் நள்ளிரவில் படப்பிடிப்பு நடந்துள்ளது. நள்ளிரவு தானே ரசிகர்கள் வர மாட்டார்கள் என்று நினைத்தால் அங்கும் வந்து குவிந்துவிட்டனர்.
தூக்கத்தை விடுத்து தன்னை காண வந்த ரசிகர்களை நோக்கி விஜய் கையசைத்தார். உடனே அவர்கள் குஷியில் தலைவா என்று கோஷமிட்டனர். இதற்கிடையே தளபதி 63 படத்திற்காக போடப்பட்டுள்ள பிரமாண்ட செட்டின் வீடியோவை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











