மழை: நட்டாற்றில் ஷூட்டிங்குகள்!
| Click here for more images |
தொடர் மழை காரணமாக திரிஷா, வடிவேலு, நயனதாரா ஆகியோர் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளனவாம்.
தமிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த வரிசையில் இப்போது சினிமாக்காரர்களும் சேர்ந்துள்ளனர்.
தனுஷ், நயனதாரா நடித்து வரும் படம் யாரடி நீ மோகினி. இப்படத்தின் ஷூட்டிங் நெல்லை பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அடித்து விளாசி வரும் மழையால் படப்பிடிப்பை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். இதனால் ஷூட்டிங்குக்கு பேக்கப் சொல்லி விட்டு சென்னைக்குத் திரும்பி விடலாமா என இயக்குநர் ஜவஹர் யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.
இப்படத்தை தனுஷின் அண்ணனான செல்வராகவன் தயாரிக்கிறார். அவருடைய அசோசியேட்தான் ஜவஹர் என்பது நினைவிருக்கலாம்.
இதேபோல அபியும், நானும் படமும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங்குக்காக பிரகாஷ் ராஜ், திரிஷா உள்ளிட்டோர் மூணாறு பக்கம் முகாமிட்டுள்ளனர்.
அங்கும் மழை வெளுத்து வாங்குவதால் வெளியில் தலை காட்ட முடியாமல் ஹோட்டல் அறைகளுக்குள்ளேயே அத்தனை பேரும் முடங்கிக் கிடக்கிறார்களாம். மழை எப்போது விடும், ஷூட்டிங்கை எப்போது ஆரம்பிக்கலாம் என்ற கவலையில் உள்ளாராம் பிரகாஷ் ராஜ். காரணம், இவர்தான் படத்தின் தயாரிப்பாளர்.
இதேபோல மழையால் பாதிக்கப்பட்டுள்ள இன்னொரு படம் இந்திரலோகத்தில் நா. அழகப்பன். வடிவேலு வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் 3 வித்தியாசமான கெட்டப்களில் நாயகனாக நடிக்கும் படம் இது. ஷ்ரியாவுடன் ஒத்தப் பாட்டுக்கு ஒசத்தியான ஒரு ஆட்டத்தையும் போட்டுள்ளார் வடிவேலு.
இப்படத்தின் ஷூட்டிங் நெல்லை பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. மழை காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாம்.
மழை விட்டால்தான் இந்தப் படங்களின் ஷூட்டிங்குகள் தொடருமாம். இல்லாவிட்டால் பேக்கப் சொல்லி விட்டு சென்னைக்குத் திரும்பும் ஐடியாவில் 3 படங்களின் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் உள்ளனர்


Click it and Unblock the Notifications











