வரலட்சுமி பட ஷூட்டிங்கில் தீ விபத்து... 5 வயது சிறுமி மற்றும் அவரது தாய் பலி!

வரலட்சுமி நடிக்கும் கன்னட பட படப்பிடிப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் 2 பேர் பலியாகினர்.

Recommended Video

வரலட்சுமி படப்பிடிப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் 2 பேர் பலியாகினர்- வீடியோ

சென்னை: வரலட்சுமி பட படப்பிடிப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் 2 பேர் பலியாகினர்.

வரலட்சுமி நடித்துள்ள நீயா 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. வெல்வட் நகரம் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்.

Fire accident in Varalakshmi film shooting: 2 dead

வி.சமுத்ரா இயக்கும் ரணம் எனும் கன்னட படத்தில் வரலட்சுமி நடிக்கிறார். இப்படத்தில் அவர் சிபிஐ அதிகாரி வேடம் ஏற்றுள்ளார்.

ரணம் படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவுக்கு அருகில் உள்ள பாகலூரில் நடைபெற்று வருகிறது. இரண்டு கார்கள் மோதி தீப்பிடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக, அங்கிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.

சிலிண்டர் வெடித்து சிதறியதில் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 5 வயது சிறுமியும், அந்த குழந்தையின் தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த முறையாக அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X