ஜீரோ ஷூட்டிங்கில் தீவிபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஷாரூக்!

ஷாருக் கானின் ஜீரோ படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

மும்பை: ஜீரோ படப்பிடிப்பு தளத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக நடிகர் ஷாரூக்கான் உயிர் தப்பினார்.

பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தற்போது ஜீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு ஜனவரியில் ரிலீசாக இருக்கிறது. இதனால் படப்பிடிப்புகள் துரிதகதியில் நடத்தப்பட்டு வருகின்றன.

Fire accident in Zero shooting spot

இந்நிலையில், மும்பையில் உள்ள திரைப்பட நகர் ஒன்றில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக படப்பிடிப்பு தளத்தில் தீ பற்றியது. இந்த விபத்து ஏற்பட்ட போது நடிகர் ஷாரூக்கானும் அங்கு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீவிபத்தில் யாருக்கும் காயமில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், படப்பிடிப்புத் தளத்தில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.

என்ன காரணத்தால் இந்த தீ விபத்து ஏற்பட்டது எனத் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X