»   »  லயாவா புளோராவா

லயாவா புளோராவா

Subscribe to Oneindia Tamil

கஜேந்திரா கிட்டத்தட்ட முடிவடையும் நிலைக்கு வந்து விட்டதால் அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார் கேப்டன்.

குடும்பப் படமான எங்கள் அண்ணாவுக்குப் பிறகு விஜயகாந்த் நடித்து வரும் படம் கஜேந்திரா. இதனால், படத்தில் ஏகத்துக்கும்மசாலாவை சேர்த்து வழக்கமான விஜயகாந்த் படம் ஆக்கியிருக்கிறார்கள்.

அடிதடி, ரகளை, ரத்தக் களறியோடு கொஞ்சம் தூக்கலான கவர்ச்சியுடன் தயாராகி வரும் கஜேந்திராவின் படப்பிடிப்பு 90 சதவீதம்முடிவடைந்து விட்டது. இதில் ரஜத், நவாப் என்ற இரு ஆஜானுபாகு மும்பை வில்லன்களையும் சேர்த்து, அவர்களை அடித்து,துவைத்திருக்கிறாராம் விஜய்காந்த்.

படத்தில் கேப்டனுக்கு ரெண்டு ஜோடி. தெலுங்கில் இருந்து அழைத்து வரப்பட்ட லயாவுக்கும் புதிதாக மும்பையில் இருந்துபுளோராவுக்கும் கடும் போட்டி. எல்லாம் கண்ணுக்கு விருந்தளிப்பதில் தான்.

புளோராவின் ஜாக்கெட்டுக்குள் கட்டெறும்பு புகுந்து விட அதிடமிருந்து புளோராவை விஜய்காந்த் தனதுதிறமையால் காப்பாற்றும் காட்சிகள் எல்லாம் இருப்பதை ஏற்கனவே சொன்னோம்.

அத்தோடு புளோராவின் தொப்புளில் மஞ்சள் தடவியும் விளையாடி இருக்கிறார் விஜய்காந்த்.

ஹீரோயின் லயா தான் என்றாலும் அவரைவிட கொஞ்சம் பூசினாற்போல இருக்கும் புளோராவுக்கே கேப்டனுக்கு அதீதமுக்கியத்துவம் தர லயாலா செல்லமாக கோபித்துக் கொண்டாராம். இதனால் அவர் விருப்பப்பட்டபடி ஏகப்பட்ட கவர்ச்சிக்காட்சிகளை செருகியிருக்கிறார்கள்.

ஒரு பாடல் காட்சியில், மலையாளத்து உடையில், அது தாங்க, வெறும் ஜாக்கெட்டுடன் லயாவை கேப்டன் தூக்கிக், கொஞ்சிமகிழ்ந்திருக்கிறாராம் இருக்கிறாராம்.

படத்தில் ஆக்ஷன் காட்சிகளைவிட அதிகமாக கஷ்டப்பட்டு இரு ஹீரோயின்களுடனும் ஆடிக் கலைத்தாராம் கேப்டன்.

இந்தக் கவர்ச்சி- ஆக்ஷன் காட்சிகளை போட்டுக் காட்டி கஜேந்திராவை மிகப் பெரிய விலைக்கு வினியோகஸ்தர்களிடம்விற்றுள்ளார் விஜய்காந்த்.

இதனால் மகா குஷியாக அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார். திருமலை, சுள்ளான் படங்களை இயக்கிய ரமணா தான்அடுத்த படத்தை இயக்கவுள்ளார். அதற்கு பார்த்தசாரதி என்று பெயரிட்டுள்ளார்கள். ஜூலையில் படத்தைத்தொடங்கவுள்ளார்களாம்.

கஜேந்திரா வெளியாகும் முன்பே கோலிவுட்டில் மார்க்கெட் பிடிக்கும் வேலைகளை புளோராவும் லயாவும் தீவிரமாக்கிவிட்டனர்.இதற்காக தங்களின் சூடான ஆல்பங்களை தயார் செய்து அதை இயக்குனர்கள் மத்தியில் சுற்றுக்கு விட்டு வருகின்றனர்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil