»   »  தமன்னா போலவே ஹன்சிகாவுக்கும் "நாய்க் காது".. இது போகன் ஷூட்டிங் ஸ்பாட் லகலக!

தமன்னா போலவே ஹன்சிகாவுக்கும் "நாய்க் காது".. இது போகன் ஷூட்டிங் ஸ்பாட் லகலக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போகன் படப்பிடிப்பின் போது நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்களைத் தொகுத்து வீடியோவாக தனது யுடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஹன்சிகா.

ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லட்சுமணன் இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி, ஹன்சிகா கூட்டணியில் உருவாகி வருகிறது போகன். இப்படத்தில் தனி ஒருவனைத் தொடர்ந்து அரவிந்த்சாமி மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கிறார். பிரபு தேவா ஸ்டுடியோஸ் பட நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் போகன் பட பர்ஸ்ட் லுக்கை அப்பட நாயகி ஹன்சிகா வெளியிட்டார். இந்நிலையில், தற்போது போகன் படப்பிடிப்பின் போது நடந்த சில சுவாரஸ்யமான அனுபவங்களை வீடியோவாக்கி இருக்கிறார் ஹன்சிகா.


ஒன்லி ஹன்சிகா...

ஒன்லி ஹன்சிகா...

தொடர்ந்து சமூகவலைதளங்களில் இயங்கி வரும் பிரபலங்களில் ஹன்சிகாவும் ஒருவர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ‘ஒன்லி ஹன்சிகா' என்ற பெயரில் அவர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கினார்.


வீடியோக்கள்...

வீடியோக்கள்...

அதில், தனது பட ஸ்டில்கள், வீடியோக்கள் மற்றும் தனது பேட்டி ஒளிபரப்பாகும் என ஹன்சிகா தெரிவித்துள்ளார். மேலும், அந்த யுடியூப் சேனல் வாயிலாக வாரம் ஒருமுறை ரசிகர்களை நேரடியாக சந்திக்க இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.


போகன் ஷூட்டிங் ஸ்பாட்...

போகன் ஷூட்டிங் ஸ்பாட்...

இந்நிலையில், இன்று தனது யுடியூப் சேனலில் போகன் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளின் வீடியோவை வெளியிட இருப்பதாக நேற்றே அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.


ஒரு நிமிட வீடியோ...

ஒரு நிமிட வீடியோ...

அதன் தொடர்ச்சியாக இன்று சுமார் ஒரு நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், போகன் பட ஸ்டில்களும், படப்பிடிப்பின் போது நடந்த காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.


லகலக காட்சிகள்...

லகலக காட்சிகள்...

மேக்கப்பின் போது ஹன்சிகா தனது மொபைல் போனில் அழகு பார்ப்பது, புதிய ஆப் ஒன்றின் மூலம் ஹன்சிகா தனக்கும், ஜெயம்ரவிக்கும் நாய்க்குட்டி போல் காது வைத்து, நாக்கை வெளியில் நீட்டி சேட்டை செய்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.


தொடரும்...

தொடர்ந்து இது போன்ற வீடியோக்களை தனது யுடியூப் சேனலில் வெளியிட இருப்பதாக ஹன்சிகா தெரிவித்துள்ளார்.


பார்க்குறதுக்கு நாங்களும் வெயிட்டிங்...English summary
Actress Hansika has released a fun video in her new youtube channel.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil