என்ன கன்ட்ராவி இது, டீசன்ட்டா டிரஸ் பண்ணிட்டு வாங்க: நயன்தாராவுக்கு உதயநிதி உத்தரவு
சென்னை: இது கதிர்வேலன் காதல் படப்பிடிப்பில் பாடல் ஒன்றுக்கு படுகவரச்சியாக உடை அணிந்து வந்த நயன்தாராவிடம் டீசன்ட்டா டிரஸ் பண்ணிட்டு வாங்க என்று நாயகன் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டாராம்.
நயன்தாரா படிப்பிடிப்புகளுக்கு போர்த்திக் கொண்டு வந்ததுடன் படங்களிலும் கவர்ச்சிக்கு தடா போட்டார். இதையடுத்து அவர் நடிக்கும் படங்களில் இளம் நாயகி ஒருவரை நடிக்க வைத்து அவருக்கு முக்கியத்துவமும், கவர்ச்சியும் உள்ள கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படி நம்மை வயதானவர்கள் பட்டியலில் சேர்த்துவிட்டார்களே என்று நயன்தாரா வருத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து நயன்தாராவின் உடையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

பாடலில் படுகவர்ச்சி
இது கதிர்வேலன் காதல் படத்தில் கவர்ச்சிக்கு வேலை இல்லை என்றாலும் நயனின் விருப்பத்திற்காக இயக்குனர் அவரை பாடல் காட்சிகளில் படுகவர்ச்சியாக ஆட வைத்தாராம்.

ஆடிப்போன உதயநிதி
அதைப் பார்த்த நாயகன் உதயநிதி ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்துவிட்டாராம். என் படத்தில் கதைக்கு தானே தவிர கவர்ச்சிக்கு முக்கியத்துவம் இல்லை என்று கறாராக சொல்லிவிட்டாராம்.

டீசன்ட்டா வாங்க
பாடல் காட்சிக்கு படுகவர்ச்சியான உடையணிந்து வந்த நயனிடம் கொஞ்சம் டீசன்ட்டா டிரஸ் பண்ணிட்டு வாங்க என்று உதயநிதி உத்தரவிட்டாராம். இதையடுத்து நயன் பழையபடி போர்த்திக் கொண்டு வந்து உதயநிதியுடன் டான்ஸ் ஆடினாராம்.


Click it and Unblock the Notifications











