»   »  சிஸ்டர் கோபிகா!

சிஸ்டர் கோபிகா!

Subscribe to Oneindia Tamil

குஷ்புவின் வூட்டுக்காரர் சுந்தர்.சி 2வது முறையாக ஹீரோவாக நடிக்கும் வீராப்பு படத்தில் அவருக்கு ஜோடி போடுகிறார் கோபிகா. படத்தில்தான்ஜோடியாம், நடிக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் சிஸ்டர், சிஸ்டர் என்றுதான் கோபியை கூப்பிடுகிறாராம் சு.சி.

தலைநகரம் படத்தின் மூலம் சுந்தர்.சியும் ஹீரோவானார். முதன் முதலில் ஹீரோவாக நடித்த படம் பிய்த்துக் கொண்டு ஓடியதால் சந்தோஷமாகிவிட்டார் சுந்தர்.சி. இதையடுத்து இரண்டு படத்தை இயக்கிய அவர் சின்ன கேப்புக்குப் பிறகு இப்போது மறுபடியும் நடிப்புக்கு வந்துள்ளார்.

சுத்தமான அக்மார்க் காதல் கதையாம் இது. காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். நெல்லை மாவட்டத்தை மையமாகக் கொண்ட படம்என்பதால் அந்தப் பக்கமாக டேரா போட்டு படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

தற்போது அம்பாசமுத்திரம் பக்கம் ஷூட்டிங் போய்க் கொண்டுள்ளதாம். படப்பிடிப்பைப் பார்க்க ஜனக் கூட்டம் அலை மோதுகிறதாம். பத்ரிபடத்தை இயக்குகிறார்.

சுந்தர்.சிக்கு இதில் ஜோடி கோபிகா. படத்தின் கதை பிடித்துப் போனதால் உடனே கால்ஷீட் கொடுத்து விட்டாராம் கோபிகா. அதை விடபடப்பிடிப்புக்கு வந்த அவருக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சியும் காத்திருந்ததாம்.

படப்பிடிப்புக்கு வந்த நிமிடம் முதல் அவரை சிஸ்டர் என்றுதான் சுந்தர்.சி. அன்பொழுக அழைக்கிறாராம். இது அவருக்கு நெகிழ்ச்சியைக் கொடுத்துவிட்டதாம்.

இந்தக் காலத்தில் யாராவது அழகான ஹீரோயினைப் பார்த்து சிஸ்டர் என்பார்களா? ஆனால் எனக்கு அந்தப் பாக்கியம் கிடைத்துள்ளது, சுந்தர்.சி.ஒரு ஜென்டில்மேன் என்று நெகிழ்ந்து போய் கூறுகிறார் கோபிகா.

இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சுமித்ரா, டெல்லிகுமார் (இவர் நடிகர் அரவிந்த்சாமியின் ஒரிஜினல் அப்பா-தனது உறவினருக்கு சின்ன வயதிலேயேஅரவிந்த் சாமியை தத்துக் கொடுத்து விட்டார்!) ஆகியோரும் படத்தில் உள்ளனர்.

கோபிகாவை ஹீரோயினாகப் போட்டு விட்டதால், கிளாமர் பக்கத்தை வெயிட் ஆக்குவதற்காக கும்மான ஒரு குத்துப் பாட்டையும் படத்தில்வைத்துள்னர். அந்தப் பாட்டுக்கு சுந்தர்.சி.யும் படு கிளப்பலாக ஆடுகிறாராம்.

வீராப்பு விறைப்பாக வந்தால் சரி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil