»   »  தாணுவை டென்ஷனாக்கிய கோபிகா!

தாணுவை டென்ஷனாக்கிய கோபிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தொட்டி ஜெயா படத்துக்கு குறித்த தேதிகளில் நடிக்க வராமல் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவை அநியாயத்துக்கு டென்ஷனாக்கி வருகிறார் நடிகை கோபிகா.

எல்லா புதுமுக நடிகைககளைப் போல ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக இருந்த கோபிகா, கொஞ்சம் பேர் வந்ததும் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டார்.

தமிழில் இவர் நடித்து ஆட்டோகிராப் படம் மட்டுமே வெளிவந்துள்ளது. இடையில் மலையாளத்தில் இவர் நடித்து வெளியான 4 தி பீப்பிள் படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 4 ஸ்டூடண்ட்ஸ் என வெளியானது. (இதில் கோபிகாவுடன் ஜோடி போட்டது காதல் பட ஹீரோ பரத்)

அந்தப் படம் சரியாக ஓடவில்லை. இருப்பினும் தமிழில் தொட்டி ஜெயா, பொன்னியின் செல்வன், கனாக் கண்டேன் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

மெதுவாக வளர்ந்து வரும் இந்த நேரத்தில் தயாரிப்பாளர்களிடம் நல்ல பெயர் வாங்கி, முதலிடத்திற்கு வருவதற்கு முயற்சிப்பதை விட்டு விட்டு, கால்ஷீட் சொதப்பல் காரணமாக இப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் முன் நிற்கிறார்.

தமிழ் சினிமாவில் முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவரான தாணுவையே கால்ஷீட் விவகாரத்தில் அநியாயத்துக்கு சதாய்த்திருக்கிறார் கோபிகா.

தாணு தயாரிப்பில் சிம்பு கதாநாயகனாக நடிக்கும் தொட்டி ஜெயாவுக்கு குறித்துக் கொடுத்த தேதிகளில் பெரும்பாலும் கோபிகா வரவில்லையாம். காரணம் கேட்டால் அதே தேதியில் மலையாளத்தில் ஒரு படத்தின் சூட்டிங் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தாணு, ஒரு கட்டத்தில் பொறுமை எல்லை மீறி நேரே தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போய் புகார் கொடுத்து விட்டார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பாளர் சங்கத் தலைவரானதும் விசாரணைக்கு வந்த முதல் கேஸ் கோபிகாவினுடையதுதான். தயாரிப்பாளர் சங்கத்தில் தாணுவுக்கு பெரும் செல்வாக்கு உண்டு என்பதால், கோபிகாவை அழைத்து செம ரைடு விட்டிருக்கிறார்கள்.

தொட்டி ஜெயா படத்திற்கு சொன்ன தேதிகளில் வரவில்லை என்றால் பிறகு எந்த தமிழ் சினிமாவிலும் நடிக்கவே முடியாது, மொத்தமாக ரெட் கார்டு போட்டு கேரள சினிமாவுக்கே திருப்பி அனுப்பிவிடுவோம் என்று தியாகராஜன் மிரட்டி அனுப்பியிருக்கிறார்.

இப்போது மந்திரித்துவிட்ட கோழி மாதிரி ஆகிவிட்ட கோபிகா சரியான நேரத்தில் சூட்டிங்கிற்கு வந்து விடுகிறாராம்.

இந்தப் படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கும் கோபிகாவுக்கு கனாக் கண்டேன் படத்தில் கிராமத்துப் பெண் வேடம்.

ரவிகிருஷ்ணாவுடன் நடிக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கோபிகாவிற்கு இரட்டை வேடமாம். அதில் ஒன்று அம்மா வேடமாம். அதுக்குள்ளயா என்று வியக்காதீர்கள்... படத்தில் இளம் கோபிகாவிற்கு அம்மாவாக இன்னொரு ரோலும் செய்யப் போகிறார் கோபிகா.

இதுவரை தயாரிப்பாளர்கள் செலவில் நட்சத்திர ஹோட்டலில் குடியிருந்து வந்த கோபிகாவுக்கு இப்போது சென்னை பைகிராப்ட்ஸ் ரோட்டில் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து குடியேறிவிட்டார். த்ரிஷா விஷயத்தில் பாத்ரூம் மேட்டர் கிளப்பிய பீதிதான் காரணம் என்கிறார்கள்.

வாடகை வீடு என்றால் தயாரிப்பாளர்களின் தலையில் பில் கட்ட முடியாதே இதனால் சேச்சி, சொந்த வீடு தேடி வருகிறார்.

இதற்கிடையே இன்னொரு கூத்தைக் கேளுங்களேன். காதல் படம் வெற்றியடைந்ததும் பரத் தனது சம்பளத்தை 40 லட்சமாக ஏற்றிவிட்டார். அதோடு தனக்கு ஜோடியாக நடிக்க கோபிகா அல்லது சந்தியா தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம்.

ஏம்ப்பா, அதுக்குள்ள இப்படி!!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil