சூட்டிங் ஸ்பாட்

By Staff

25 ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரையுலகில் புதிய சகாப்தம் ஒன்று தொடங்கியது. தொடங்கி வைத்தவர் பஞ்சுஅருணாச்சலம். சகாப்தமாக வெளிக் கிளம்பியவர் இசைஞானி இளையராஜா.

அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் இளையராஜாவையும், புதிய இசையையும் தமிழ் திரையுலகுக்குஅறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம், தனது படத் தயாரிப்பில் வெள்ளி விழா காண்கிறார்.

இதையொட்டி இளையராஜாவுடன் இணைந்து மீண்டும் ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளார்பஞ்சு.

வெள்ளி விழாத் தயாரிப்பாக உருவாகும் இந்தப் படத்திற்கு உயிர் நண்பனுக்கு.. என்றுபெயரிட்டுள்ளார்கள்.

இயக்குனர் சேரன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு மூன்று ஜோடிகள். கோபிகா, சங்கவி, ஷமீதா ஷெட்டிஆகியோர். இதில் கோபிகாவோடு ஏற்கனவே ஆட்டோகிராப் படத்தில் நடித்து இயக்கி வருகிறார் சேரன்.இப்போது மீண்டும் ஜோடி சேருகிறார்.

இவர்களுடன் வினீத்தும் உள்ளார். இந்தப் படம் பஞ்சுவுக்கு 39வது தயாரிப்பாகும். இதற்குமுன் தயாரித்த 38 படங்களுக்கும் இளையராஜா அல்லது அவரது மகன்கள்தான் இசையமைத்துள்ளனர்.

முதல் படமான அன்னக்கிளிக்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை பஞ்சுவே எழுதினார்.அதேபோல, புதிய படத்திற்கும் அவரே இந்த பொறுப்புகளைப் பார்த்துக் கொள்கிறார்.

படத்தை இயககப் போவது சத்திரக்கனி என்பவராம்.

இந்தப் படம் தவிர மேலும் 3 படங்களையும் வெள்ளிவிழா ஆண்டையொட்டி தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்பஞ்சு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X