»   »  கோபிகா, ஸ்னேகா லடாய்!

கோபிகா, ஸ்னேகா லடாய்!

Subscribe to Oneindia Tamil

கோபிகாவுக்கும், ஸ்னேகாவுக்கும் இடையே லடாய் ஏற்பட்டுள்ளதாம். இருவரும் சரமாரியாக ஒருவர் மீது ஒருவர்குற்றச்சாட்டுக்களைக் கூறத் தொடங்கியுள்ளதால் கோலிவுட்டில் புதிய நட்சத்திரப் போர் ஏற்பட்டுள்ளது.

ஆட்டோ கிராப் படத்தின் போதே இருவருக்கும் இடையே லேசுபாசாய் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆட்டோகிராப்பில்கோபிகா, சேரனின் கல்லூரிக் கால காதலியாக நடித்திருப்பார். ஸ்னேகா சேரனின் தோழியாக வந்து போவார்.

இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சிகள் மிகவும் குறைவாகத் தான் இருந்தது. அந்த சமயத்தில், யாருடைய கேரக்டர்வலுவானது என்பதில் இருவருக்கும் இடையே லேசான உரசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் சேரன் தலையிட்டு இருவருக்குமே நல்ல ரோல் தான் என்று கூறி சமாதானப்படுத்தி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைத்தாராம்.

இப்போது இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதாம். இந்த முறை, கனா கண்டேன் படத்தை வைத்துஇருவரும் மோதியுள்ளார்கள். கனா கண்டேன் படத்தில் கோபிகா சில காட்சிகளில் ஸ்ரீகாந்த்துடன் மிகவும் நெருக்கமாகநடித்திருந்தது குறித்து தனக்கு நெருக்கமானவர்களுடன் ஸ்னேகா வெடித்திருக்கிறார்.

கோபிகா தரம் தாழ்ந்து நடித்துள்ளதாகவும் ஸ்னேகா கூறியுள்ளாராம். இது கோபிகாவின் காதுகளுக்கு எட்டவே அவர்கடுப்பாகியுள்ளார். நான் எப்படி நடித்தால் இவருக்கு என்ன? இவர் மட்டும் கவர்ச்சி காட்டவில்லையா? சின்னா படம்வரட்டும்... ஸ்னேகாவின் குடும்ப வேஷம் வெளுக்கும் என்று கூறியுள்ளார் கோபிகா.

கோபிகா கூறியது ஸ்னேகா காதுகளுக்குப் போக அவர் அப்செட் ஆகியுள்ளார். பொதுவாக யாரையும் கமெண்ட் அடிக்காதவர்ஸ்னேகா. அவர் எதற்காக கோபிகாவை சீண்ட வேண்டும் என்று விசாரித்துப் பார்த்தோம்.

ஸ்ரீகாந்த்துடன் கோபிகா அவ்வளவு நெருக்கமாக நடித்தது ஸ்னேகாவுக்குப் பிடிக்கவில்லை. அதனால் தான் கோபிகாவைசரமாரியாக வாரியுள்ளார் என்று இரு தரப்பு விவகாரங்களையும் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

ஸ்ரீகாந்த்துடன் ஸ்னேகாவுக்கு காதல் இருந்தது உலகறியும். இப்போது அந்தக் காதல் முறிந்து விட்டதையும் திரையுலகம் நன்குஅறியும்.

தன்னை விட்டு ஸ்ரீகாந்த் பிரிந்த பிறகு கோபிகாவுடன் அவர் நன்றாக ஒட்டிக் கொண்டு விட்டார் என்று ஸ்னேகாவிடம் சிலர்கூறியதால் எரிச்சலடைந்தார் ஸ்னேகா. இதனால் தான் கனா கண்டேன் குறித்து கமெண்ட் அடித்தாராம்.

ஸ்னேகா, கோபிகா மோதல் விஸ்வரூபம் எடுக்குமா அல்லது புஸ்வாணமாகிப் போய் விடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.


Read more about: gopika vs sneha
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil