சூட்டிங் ஸ்பாட்
சேரன் மிக ஆர்வமாக எடுத்து வரும் ஆட்டோகிராப் படத்தின் ஹீரோயின் கோபிகா மலையாளத்தில் இருந்துஇறக்குமதியானவர்.
பல நடிகைகளை மேக்-அப் டெஸ்ட் எடுத்தும் யாரும் சரி வராததால் இவரை கேரளத்தில் இருந்து இழுத்து வந்தார்சேரன். அவரது எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல் கோபிகா மிக அட்டகாசமாக நடிக்கிறாராம். ஹீரோவும் சேரன்தான்.
இந்தப் படம் 1970களில் ஆரம்பித்து நடக்கும் கதை என்பதால் அந்த கால பெல்-பாட்டம் பாண்ட், 3 அடி நீளகாலர் கொண்ட சர்ட், பூட்ஸ், நீளமான தொங்கு மீசை, ஹிப்பி என பாலைவனச் சோலைகள் ஹீரோக்களைநினைவூட்டும் காஸ்ட்யூமில் நடிக்கிறார் சேரன்.
இதில் தமிழின் 256 எழுத்துக்களும் அடங்கிய சேலையுடன் கோபிகா ஆடிப் பாடும் காட்சி ஒன்று சமீபத்தில் குலுமணாலியில் படமாக்கப்பட்டுள்ளது.
இத்தனை எழுத்துக்களையும் அடக்க ஒரு சேலை போதவில்லையாம்.இதனால் 3 சேலைகளை ஒன்றாய் சேர்த்துத் தைத்து கோபிகாவை அணிய விட்டார்களாம்.
படத்திலும் இவர் மலையாளப் பெண்ணாகவே நடிக்கிறார். பாடலில் தமிழ் கற்றுக் கொள்வது போன்ற காட்சியாம்.நிஜத்தில், பல தமிழ் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களைவிட நன்றாகவே தமிழ் பேசுகிறார் கோபிகா.


Click it and Unblock the Notifications











