twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜப்பானில் சூறாவளியில் சிக்கிய 'பென்சில்' ஜிவி பிரகாஷ் - ஸ்ரீதிவ்யா

    By Shankar
    |

    ஜப்பானில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது பென்சில் பட கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் உள்பட மொத்த குழுவினரும் கடும் சூறாவளியில் சிக்கிக் கொண்டார்களாம்.

    படக்குழுவினர்தான் அவர்களைக் காப்பாற்றியுள்ளனர்.

    இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் பென்சில். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்படிப்பு அண்மையில் ஜப்பானில் நடைபெற்றது.

    GV Praksh - Sridivya brave Super Typhoon Nuri

    படப்பிடிப்பின்போது ஏற்பட்ட நூரி எனும் கடும் சூறாவளியில் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட குழுவினர் சிக்கித் தவித்தது தெரிய வந்துள்ளது.

    ஜப்பானில் உள்ள யட்சுகடகே எனும் மலை உச்சியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. படக்குழுவினர் விஞ்ச் மூலம் மலை உச்சிக்கு சென்றனர். அப்போது ஏற்பட்ட கடும் சூறாவளி காரணமாக அப்போது மலை உச்சியில் கடும் குளிர் நிலவியது. பிராண வாயு பற்றாக்குறையால் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம்.

    கதாநாயகி ஸ்ரீதிவ்யாவின் தாயார் கடுமையாக பாதிக்கப்பட்டபோது குழுவில் இருந்த தயாரிப்பாளர் மருத்துவர் என்பதால் உடனடியாக முதலுதவி அளித்துள்ளார். இருப்பினும் மற்றவர்களும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

    படப்பிடிப்பு நடத்துவதே மிகப் பெரிய சவாலாக இருந்தாலும், குழுவினர் ஒத்துழைப்புடன் திட்டமிட்டபடி காட்சிகளை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் மணி நாகராஜ். படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இன்று படக்குழுவினர் சென்னை திரும்புகின்றனர்.

    English summary
    The cast and crew of Pencil, currently shooting in Japan has braved through the Super Typhoon Nuri that has been threatening Japan for the past few days.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X