ஆம்பள பட ஷூட்டிங்கில் ‘சின்னப் பூ’வைக் கடித்த தேனீ...
ஊட்டி: ஆம்பள பட ஷூட்டிங்கின் போது தேனீ கடித்ததால் வலியால் அவதிப் பட்டார் நடிகை ஹன்சிகா. ஆனபோதும், தனது வலியை வெளிக் காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து தனது காட்சிகளை அவர் நடித்துக் கொடுத்தார்.
நடிகை ஹன்சிகா தற்போது விஷால் ஜோடியாக் ஆம்பள என்ற படத்தில் நடித்து வருகிறார். அரண்மனைப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி.
இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி பகுதியில் நடந்து வருகிறது.

தேனீ...
விஷால் மற்றும் ஹன்சிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் ஊட்டி வனப் பகுதியில் நடைபெற்றது. அப்போது தேனீ ஒன்று ஹன்சிகாவின் கையில் கடித்து விட்டது.

வீக்கம்...
வலியை வெளிக்காட்டாமல் நடித்துக் கொண்டிருந்தார் ஹன்சிகா. ஆனபோதும், சிறிது நேரத்தில் அவரது கை சிவந்து வீக்கம் ஏற்பட்டது.

ஓய்வெடுக்க மறுப்பு...
இதனைக் கண்டு பதறிப் போன படப்பிடிப்புக் குழுவினர் ஹன்சிகாவை சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அதனை மறுத்த ஹன்சிகா தொடர்ந்து நடித்துள்ளார்.

படப்பிடிப்பு முக்கியம்...
மேலும், ‘என்னால் படப்பிடிப்பு பாதிக்கப்படக் கூடாது, எனவே படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துங்கள்' என்று கூறி தனது காட்சிகளை நடித்துக் கொடுத்துள்ளார் ஹன்சிகா.

நிம்மதி...
பின்னர், சிறிது நேரத்தில் தேனீ கடித்த இடத்தில் வீக்கம் குறைய ஆரம்பித்ததும் தான் படக் குழுவினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்..

புயல் நிவாரண நிதி...
ஆம்பள படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஹைதராபாத் செல்லும் ஹன்சிகா, அங்கு விசாகப்பட்டினம் புயல் நிவாரண நிதி திரட்ட நடைபெறும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

தத்துக் குழந்தைகளுடன் தீபாவளி...
அதனைத் தொடர்ந்து மும்பை செல்லும் ஹன்சிகா, இந்தாண்டு தீபாவளியை தனது தத்துக் குழந்தைகள் 30 பேருடன் கோலாகலமாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளார்.

அடுத்து ரோமியோ - ஜூலியட்...
தீபாவளி முடிந்ததும் சென்னை திரும்பும் ஹன்சிகா அடுத்து தான் நடிக்கும் ‘‘ரோமியோ ஜூலியட்'' படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











