»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் ஐஸ் படத்தில் அறிமுகமாகி, அதில் நடித்-த பிரி-யங்-கா திரி-வே-தி-யு-டன் கவர்ச்-சி-யில் மோதி,ஜெயிக்காமல் போனவர் தான் ஹரிப்பிரியா

அந்தப் படம் தோற்றாலும் இவரது திறமை காரணமாக மளமளவென அடுத்தடுத்து படங்களுக்குஅட்வான்ஸ்கள் கிடைத்தன. ஆனால், எல்லாம் உப்புமா கம்பெனிகள் என்பதால் எந்தப் படமும்பூஜையைக் கூட தாண்டவில்லை

.கார்த்திக்குடன் என்றும் உன்னை நேசிப்பேன் என்ற படம் மட்டுமே தொடங்கி சூட்டிங் நடந்தது.ஆனால், அதுவும் கார்த்திக்கின் ரோதனையால் நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டு,நிறுத்தப்பட்டது.

ஒரு வழியாய் படம் முடிந்து ரிலீசுக்குத் தயாரானபோது, யாரும் வாங்காததால் பெட்டியில் படுத்துகுட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.

ஐஸ் படத்தில் காட்டியதைவிட என்றும் உன்னை நேசிப்பேனில் அதிகமாகவே எக்ஸ்போஸ்செய்தார் ஹரிப்பிரியா. படம் வெளிவராததால் ஸ்டில்கள் வெளியானதோடு நின்றுவிட்டது.

ஆனாலும் முயற்சியில் தளராத ஹரிப்பிரியா கோடம்பாக்கத்தையே சுற்றிச் சுற்றி வந்தார்.தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என அனைவரையும் விரட்டி விரட்டி சந்தித்து சான்ஸ் கேட்டார்.

இவரது முயற்சிக்கு பலன் கிடைத்துவிட்டது. பொன்வண்ணனுடன் நடிக்க ஒரு வாய்ப்புகிடைத்துள்ளது. டிவி பக்கமாய் ஒதுங்கிப் போய்விட்ட இயக்குனர் பொன்வண்ணனுக்கு மீண்டும்சினிமா ஆசை வந்ததால் அவர் எடுத்து வரும் படம் கோமதி நாயகம். இதில் ஹீரோயினாகஹரிப்பிரியாவை சேர்த்துக் கொண்டுள்ளார்.

இந்தப் படத்தில் பொன்வண்ணன் பாதி எம்.ஜி.ஆர்., பாதி எம்.ஆர். ராதாவாம். ஆதாவது,வில்லனும் ஹீரோவும் கலந்த கேரக்டராம். இவருக்கு மார்க்கெட் எதுவும் இல்லாததால், கவர்ச்சியைமுதலீடாக வைத்தே படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதைப் புரிந்து கொண்டுள்ள ஹரிப்பிரியா பரிபூரண ஒத்துழைப்பும் தந்து வருகிறார். கிராமத்துப்பெண் வேடத்தில் சேலையிலேயே வீடு கட்ட வேண்டிய கதாபாத்திரம் ஹரிப்பிரியாவுக்கு.

சேலை கட்டி நடித்தாலும் பல ஜலக்கிரீடை காட்சிகள் உண்டாம். கவர்ச்சிக்கு ஹரிப்பியா மட்டும்போதாது என்று சுஹா என்ற புதுமுகத்தையும் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார் பொன்.

கேரளா, இலங்கை, ஊட்டி என நாடுவிட்டு, மாநிலம் விட்டு சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.ஆகஸ்டில் படம் ரிலீசாம்.

இந்தப் படமாவது வெளியே வந்தால் தனக்கு தமிழ்த் திரையுலகில் புது வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்,டைரக்டர் விரும்புவதையும் விட அதிகமாகவே கவர்ச்சியில் கலாய்த்து கொண்டிருக்கிறார் ஹரிப்பிரியா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil