ஓடி வந்து இடுப்பில் ஏறிய ஹீரோயின்.. பாரம் தாங்காமல் பொத்தென்று விழுந்த ஹீரோ

By Sudha

சென்னை: தடதடவென்று ஓடிவந்த ஹீரோயின், ஹீரோ இடுப்பின் மீது டக்கென்று ஏறினார். ஆனால் நடிகையின் பாரம் தாங்காமல் நிலை குலைந்த ஹீரோ பொத்தென்று விழுந்தார்.அவர் மீ்து ஹீரோயினும் விழுந்தார். ரெண்டு பேருக்கும் லேசான காயமாம்.

உனக்கு 20 எனக்கு 40 என்ற படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் இந்தக் கூத்து நடந்ததாம். கொடைக்கானலில் வைத்து இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இடுப்பு ஒடிந்து விழுந்த ஹீரோவின் பெயர் அக்ஷய். அவர் மீது ஏறிய நடிகையின் பெயர் ஷாலினி.

தாறுமாறான காதல்

தாறுமாறான காதல்

இப்படத்தின் கதை ஏடாகூடமானது. அதாவது கிட்டத்தட்ட அபூர்வ ராகங்கள் கதை போலத்தான். ஹீரோயினின் தந்தை மீது ஹீரோயினின் தோழிக்கு காதல் வருகிறதாம். அது என்னாகிறது, எங்கு போய் முடிகிறது என்பதுதான் படத்தின் கதையாம்.

ஷாலினி- அம்ருதா

ஷாலினி- அம்ருதா

படத்தின் ஹீரோயின்களாக ஷாலினியும், அம்ருதாவும் நடிக்கிறார்கள்.இதில் ஷாலினியின் தந்தை மீதுதான் அம்ருதா காதல் கொள்கிறார்.

கொடைக்கானலில் இடுப்புக் காட்சி

கொடைக்கானலில் இடுப்புக் காட்சி

இப்படத்தின் ஒரு பாடல் காட்சியை சமீபத்தில் கொடைக்கானலில் படமாக்கினர். அப்போதுதான் ஹீரோ அக்ஷயின் இடுப்பின் மீது ஷாலினி ஓடி வந்து ஏறுவது போன்ற காட்சியைச் சுட்டனர்.

ஏறிய வேகத்தில் விழுந்தார் ஷாலினி

ஏறிய வேகத்தில் விழுந்தார் ஷாலினி

ரிஹர்சல் பார்த்த பின்னரே காட்சிக்குப் போனார்கள். ஷாலினி வேகமாக ஓடி வந்து அக்ஷய்இடுப்பின் மீது தவ்வி உட்கார்ந்தார். ஆனால் அப்போது பாரம் தாங்க முடியாமல் அக்ஷய் கீழே விழ, அவர் மீது ஷாலினியும் விழுந்தார்.

இருவருக்கும் காயம்

இருவருக்கும் காயம்

விழுந்த வேகத்தில்இரண்டு பேருக்குமே அடிபட்டு விட்டது. படக்குழுவினர் ஓடி வந்து இருவரையும் தூக்கி விட்டனர். காலை உதறச் செய்தனர். பின்னர் முதலுதவிக்குப் பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர்.

ஷாலினிக்குத்தான் இடுப்பில் பலத்த காயமாம்

ஷாலினிக்குத்தான் இடுப்பில் பலத்த காயமாம்

ஹீரோ கூட லேசான காயத்துடன் தப்பி விட்டார். ஆனால் ஹீரோயின் ஷாலினிக்குத்தான் இடுப்பில் பலத்த அடிபட்டு காயமாகி விட்டதாம்.

More from Filmibeat

Read more about: shooting spot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X