உயரமான மலையில் ஷூட்டிங்.. பயத்தில் சொல்லாமல் கொள்ளாமல் டெல்லிக்கு ஓடிப்போன நடிகை!

உயரமான இடத்தில் ஷூட்டிங் நடந்ததால் நாயகி பாதியிலேயே ஓடிப்போன சம்பவம் நடந்துள்ளது.

சென்னை: அவளுக்கென்ன அழகியமுகம் படத்தின் காட்சிகள் உயரமான மலைப்பகுதியில் படமாக்கப்பட்டதால், பயத்தில் பாதியிலேயே படப்பிடிப்பில் இருந்து நடிகை அனுபமா பிரகாஷ் ஓடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதிரவன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அவளுக்கென்ன அழகிய முகம்'. பூவரசு, அனுபமா பிரகாஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், யோகிபாபு உள்பட பலரும் நடித்துள்ளனர்.

ஏ.கேசவன் இயக்கி வரும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகள் கொடைக்கானல் மலை உச்சியில் படமாக்கப்பட்டது.

உயரத்தில் ஷூட்டிங்:

உயரத்தில் ஷூட்டிங்:

மிக உயரமான இடத்தில் வைத்து பாடல் காட்சியை நடன இயக்குனர் ஷங்கர் படம் பிடித்துக் கொண்டிருந்தார். ஆனால், உயரத்தைக் கண்டு அச்சத்தில் இருந்த பட நாயகி அனுபமா பிரகாஷ், சரிவர நடிக்க இயலாமல் திணறியுள்ளார்.

ஓய்வு:

ஓய்வு:

பின்னர் சிறிது நேரம் ஓய்வு எடுத்து வருவதாகக் கூறி தனது அறைக்குச் செல்வதாகக் கூறி சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பவில்லை. இதனால், அவரைத் தேடி படக்குழுவினர் அறைக்குச் சென்றுள்ளனர். ஆனால், அவர் அங்கு இல்லை.

எஸ்கேப்:

எஸ்கேப்:

இதனால் அவர் காணாமல் போய் விட்டாரோ என அஞ்சிய படக்குழுவினர், நடிகையை கொடைக்கானல் முழுவதும் தேடினர். பின்னர் தான் அனுபமா கொடைக்கானலை விட்டுக் கிளம்பி மதுரை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி பறந்தது தெரிய வந்தது.

ரிலீஸ்:

ரிலீஸ்:

அதனைத் தொடர்ந்து உடனடியாக டெல்லி சென்ற தயாரிப்பாளர், அனுபமாவைச் சமாதானம் செய்து மீண்டும் படப்பிடிப்பிற்கு அழைத்து வந்து, மீதிக் காட்சிகளைப் படமாக்கினர். இப்படம் இம்மாதம் 7ம் தேதி ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X