ஜேம்ஸ் பாண்ட் பட செட்டில் பெண்கள் டாய்லெட்டில் ரகசிய கேமரா

By Siva

லண்டன்: ஜேம்ஸ் பாண்ட் 25 படப்பிடிப்பு நடந்த இடத்தில் பெண்கள் கழிவறையில் கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டேனியல் கிரெய்க் நடித்து வரும் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தில் நடந்து வருகிறது. ஜேம்ஸ் பாண்ட் 25 என்று தற்போதைக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பக்கிங்ஹம்ஷயரில் உள்ள பைன்வுட் ஸ்டுடியோஸில் படப்பிடிப்பு நடந்தது.

Hidden camera found in ladies bathroom on James Bond 25 set

அப்பொழுது பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்டுடியோ ஆட்கள் உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து ஸ்டுடியோ நிர்வாகம் கூறியதாவது,

இது போன்ற விஷயங்களை நாங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்கிறோம். கேமரா சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரிவித்துள்ளோம். மேலும் விசாரணையிலும் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறோம் என்றது.

ரகசிய கேமரா விவகாரம் தொடர்பாக பீட்டர் ஹார்ட்லி என்பவரை சனிக்கிழமை காலை கைது செய்துள்ளதாக போலீசார் பின்பு தெரிவித்தனர். முன்னதாக ஜமைக்காவில் படப்பிடிப்பு நடந்த போது டேனியல் கிரெய்கிற்கு காயம் ஏற்பட்டதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கடந்த மே மாதம் டேனியல் கிரெய்கிற்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

கிரெய்க் குணமாகி வரும் நேரத்தில் பிற நடிகர்கள், நடிகைகள் தொடர்பான காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இந்த படத்தை 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக இந்த மாத துவக்கத்தில் ஜேம்ஸ் பாண்ட் 25 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் படக்குழுவை சேர்ந்த ஒருவர் காயம் அடைந்தார். பைன்வுட் ஸ்டுடியோஸில் குண்டுவெடிப்பது போன்ற காட்சியை படமாக்கினர். அப்பொழுது தான் படக்குழுவை சேர்ந்த ஒருவர் காயம் அடைந்தார்.

நான் இனிமேல் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கவே மாட்டேன். மீண்டும் ஜேம்ஸ் பாண்டாக நடிப்பதற்கு பதில் கைநரம்பை அறுத்துக் கொள்வேன் என்று டேனியல் கிரெய்க் பேட்டி அளித்தார். இந்நிலையில் அவர் ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரெய்க் பேட்டி அளித்த பிறகு வேறு யாரையாவது ஜேம்ஸ் பாண்டாக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் அது கைவிடப்பட்டு டேனியல் கிரெய்கையே மீண்டும் பாண்டாக்கிவிட்டார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X