ஹிப் ஹாப் ஆதியின் அன்பறிவு படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

சென்னை : இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி இப்போது முழுநேர நடிகராக மாறி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

புது புது இயக்குனர்களுக்கும் நடிகர்களுக்கும் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு அளித்துவரும் ஹிப்ஹாப் ஆதி இப்பொழுது அறிமுக இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் அன்பறிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கிராமத்து கதை களத்தில் முதல்முறையாக ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இப்பொழுது நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்

ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்

ஹிப் ஹாப் ஆதியின் இசைக்கென்றே இங்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் இவரது துள்ளலான இசை தொடர்ந்து படங்களில் ஒலித்துக் கொண்டிருக்க அடுத்ததாக ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி அதைத் தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால்,சிவக்குமாரின் சபதம் என தொடர்ந்து படங்களில் நடிப்பதிலும் இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

நெப்போலியன் ஆதிக்கு தாத்தாவாக

நெப்போலியன் ஆதிக்கு தாத்தாவாக

இதுவரை சிட்டி பாயாக கலக்கிக் கொண்டிருந்த ஹிப்ஹாப் ஆதி முதல்முறையாக கிராமத்து பையனாக நடித்துள்ள திரைப்படம் அன்பறிவு . அறிமுக இயக்குனர் அஸ்வின் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நெப்போலியன், ஊர்வசி,விதார்த்,சங்கீதா கிரிஷ், விஜய் டிவி தீனா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நெப்போலியன் இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு தாத்தாவாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்திருந்த காஷ்மீரா பர்தேசி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இரட்டை வேடத்தில்

இரட்டை வேடத்தில்

முதல் முறையாக இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சிவகுமாரின் சபதம் படத்தைத் தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது. மதுரையில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அன்பறிவு படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

அன்பறிவு படப்பிடிப்பு நிறைவு பெற்றது

அன்பறிவு படப்பிடிப்பு நிறைவு பெற்றது

அன்பறிவு படத்தைத் தொடர்ந்து மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை மரகத நாணயம் பட இயக்குனர் ஏ ஆர் கே சரவணன் இயக்க உள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் ஹிப்ஹாப் ஆதி மூன்றாவது முறையாக இதன் மூலம் இணைகின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்க உள்ளது. அன்பறிவு தயாரிப்பு பணிகள் மிக விரைவிலேயே தொடங்கப்பட்டு ஓரிரு மாதங்களில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X