ஹிப்ஹாப் தமிழா ஆதியோட சூட்டிங் முடிஞ்சுடுச்சு... கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு!
சென்னை : நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் சிவக்குமாரின் சபதம் படம் சமீபத்தில் வெளியாகி வசூல்ரீதியாக வெற்றிப் பெற்றுள்ளது.
இதையடுத்து அவரது அடுத்தப் படமான அன்பறிவு சூட்டிங்கில் அவர் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதை படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி
நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாக இல்லாவிட்டாலும் வசூல்ரீதியாக இவருக்கு வெற்றியை கொடுத்துள்ளன. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

ஆதியின் சிவக்குமாரின் சபதம்
தான் நடிக்கும் படங்களின் இசையமைப்பையும் இவர் பார்த்துக் கொள்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சிவக்குமாரின் சபதம் படம் பழைய படங்களை நியாபகப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன. இவர் தற்போது நடிப்பில் தன்னை சுதாரித்துக் கொள்ள வேண்டும் என்றும் விமர்சனங்கள் கூறப்பட்டன.

வசூல்ரீதியாக வெற்றி
ஆயினும் இந்தப் படம் வசூல்ரீதியாக வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையில் அட்லியின் உதவி இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கத்தில் ஆதி நடித்துள்ள அன்பறிவு படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஆதியுடன் நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சங்கீதா, உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

அன்பறிவு சூட்டிங் நிறைவு
இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையொட்டி கேக் வெட்டி சூட்டிங் நிறைவை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இதில் ஆதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதன் புகைப்படங்களையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ஆதி இயக்கத்தில் அடுத்த படம்
இதையடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஆதி இயக்கி, இசையமைத்து மற்றும் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்கவுள்ளது. ஏற்கனவே மீசையை முறுக்கு படத்தை இயக்கியுள்ள ஆதி தற்போது இந்தப் படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பன்முகம் காட்டும் ஆதி
இசையமைப்பாளராக மட்டுமின்றி தற்போது இயக்குநர், நடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இவரது வளர்ச்சி சிறப்பானதாக அமைந்துள்ளது. ஆயினும் இவர் தனது திரைக்கதை மற்றும் நடிப்பில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications











