»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்படி ஒரு பங்களாவை நான் பார்த்ததே இல்லப்பா ... இதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் முனுமுனுப்பு.

அஜீத் நடிக்கும் பூவெல்லாம் உன்வாசம் பற்றித்தான் இந்த முனுமுனுப்பு. இந்தப் படம் இப்போதே பெரும்எதிர்பார்ப்பை எழுப்பி விட்டது. படத்தின் கதையோ, அல்லது அஜீத்தின் நடிப்போ அதற்குக் காரணமல்ல, ஒருபங்களாதான் படத்தின் நிஜ ஹீரோவாகியிருக்கிறது.

அஜீத்திற்காக சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இரண்டு பங்களாக்கள் கட்டியிருக்கிறார்கள் (நடிப்புக்காகத்தான்).ஆர்ட் டைரக்டர் பிரபாகரன் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் இந்த பங்களா செட், நிஜ பங்களாக்களுக்குப்பொறாமை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.

முதலில், நிஜமான இரண்டு பங்களாக்கள் எங்காவது இருக்கிறதா என்றுதான் தேடியிருக்கிறார்கள். ஆனால் ஒரேஇடத்தில் அப்படி கிடைக்கவில்லை. பார்த்தார்கள், கட்டி விட்டார்கள். செலவு எவ்வளவு தெரியுமோ.? ரொம்பவும்அதிகமில்லை, ரூ. 1 கோடி தான்.

ஒரு பங்களா முழுவதும் பாரம்பரியான கலைப் பொருட்கள் நிறைந்து கிடக்கிறது. மற்றொரு பங்களாவில் நவீனகாலத்து சாமான்கள் ரொப்பப்பட்டுள்ளன.

இது இரண்டு நண்பர்கள் குறித்த கதை. வழக்கமாக வருவது போல அல்லாமல், காலத்தையும் கடந்து, அவர்களதுஇறுதிக் காலம் வரை நீடித்து வரும் நட்பு இது. இருவரும் பக்கத்து, பக்கத்திலேயே பங்களாக்கள் கட்டிவசிக்கிறார்கள். இதுதான் கதை. நட்புக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம் என்றார் டைரக்டர்எழில்.

இப்படத்தில் அஜீத்தின் ஜோடியாக வருகிறார் ஜோதிகா. இவர்கள் தவிர, சாயாஜி ஷிண்டே, சிவக்குமார், நாகேஷ்,பி.எஸ்.ராகவன், சுகுமாரி ஆகியோரும் இருக்கிறார்கள். கலக்கலுக்கு விவேக், கோவை சரளாவும் உண்டு.

கேமராவை ஆர்த்தர் வில்சன் கையாள, வித்யாசாகர் இசையமைக்கிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் படத்தைத் தயாரிக்கிறது.இதே பேனர்தான், வானத்தைப்போல என்ற வெற்றிப் படத்தைத் தயாரித்தது நினைவிருக்கலாம்.

அஸ்திவாரம், பங்களாவுக்கு மட்டும் இல்லை, படத்தோட கதைக்கும் முக்கியம் எழில்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil