முதல் இடம் படத்துக்காக ஏவிஎம்மில் பிரமாண்ட செட்!

ஆனால், அவுட்டோர் ஷூட்டிங் அதிகரித்த பிறகு, இந்த செட் வழக்கம் கொஞ்சம் குறைந்துவிட்டது.
ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படம் தயாரிக்க ஆரம்பித்துள்ள ஏவிஎம், தனது அடுத்த படத்துக்காக பிரமாண்ட செட் போட்டுள்ளது.
இது சண்டைக்காட்சிக்காக போடப்பட்ட செட். ஆரம்பத்தில் இந்தக் காட்சியை தஞ்சையில் உள்ள சந்தனப் பேட்டை, சவுக்கு, மூங்கில், வாள் பட்டறை என வித்தியாசமான சூழலில் எடுக்கத்திட்டமிட்டார்களாம். ஆனால் சூழ்நிலை இடம் தராததால் அதை அப்படியே ஏவிஎம்மில் பிரமாண்ட செட்டாக போட்டுவிட்டார்களாம்.
பெரிய அளவில் இந்த செட் பேசப்படும் என்கிறார்கள் ஏவிஎம் நிறுவனத்தினர்.
ஆர் குமரன் இயக்கும் இந்தப் படத்தில் விதார்த் - கவிதா நாயர் நடிக்கிறார்கள். இளவரசு, திருமுருகன், அப்புக்குட்டி, யோகி தேவராஜ், ரேகா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
விரைவில் வெளியாகத் தயாராகிவருகிறது முதல் இடம்.


Click it and Unblock the Notifications











