மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் அடுத்த ஷெட்யூல் எப்போது? ஐதராபாத்தில் ரெடியாகும் பிரமாண்ட செட்
சென்னை: பொன்னியின் செல்வன் படத்துக்காக ஐதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது.
கல்கியின் பிரமாண்ட நாவலான 'பொன்னியின் செல்வனை' படமாக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.
விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லால் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

தாய்லாந்தில்
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. இந்தப் படத்துக்காக, கோயில்களில் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்றும் தமிழகத்தில் கோயில்களில் படப்பிடிப்பு நடத்த பர்மிஷன் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் தாய்லாந்தில் ஷூட்டிங் நடந்து வருவதாகக் கூறப்பட்டது.

பொங்கலுக்கு முன்
அங்கு நடந்த படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். அவர்கள் நடித்தக் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. இந்நிலையில், படக்குழு ஷூட்டிங்கை முடித்துவிட்டு பொங்கலுக்கு முன் சென்னைத் திரும்பியது.

சென்னையில்
இந்நிலையில், இதன் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு இன்னும் 10 நாட்களில் தொடங்கும் என்றும் வேறு நாட்டில் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், சென்னையில்தான் இதன் படப்பிடிப்பு நடக்கிறது என்பது தெரியவந்துள்ளது. வரும் 1 ஆம் தேதி முதல் சென்னையில் ஷூட்டிங் தொடங்குகிறது.

ஐதராபாத்
இங்கு சரத்குமார், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. சுமார் 10 நாட்கள் இங்கு ஷூட்டிங் நடக்கிறது. இதையடுத்து 10 நாட்களுக்குப் பின், ஐதராபாத்தில் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. இதற்காக அங்கு பிரமாண்ட செட் போடப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications