Indian 2: துவங்கிய வேகத்தில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு

By Siva

Recommended Video

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு திடீர் என்று நிறுத்தப்பட்டுள்ளது- வீடியோ

சென்னை: இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு திடீர் என்று நிறுத்தப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடிக்கும் இந்தியன் 2 பட ஷூட்டிங் கடந்த டிசம்பர் மாதம் துவங்குவதாக இருந்தது. ஆனால் செட் அமைக்கும் பணி முடியாததால் படப்பிடிப்பு துவங்க தாமதமானது.

Indian 2 shooting halted

கடந்த 18ம் தேதி துவங்கிய படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு துவங்கியபோது கமல் ஹாஸன், காஜல் அகர்வால் தொடர்பான காட்சிகளை படமாக்கினர்.

அந்த காட்சிகளை பார்த்தபோது கமல், ஷங்கர் ஆகிய இருவருக்குமே திருப்தி இல்லையாம். மேக்கப் செயற்கையாக இருந்ததாக இருவரும் உணர்ந்துள்ளனர். இதையடுத்தே படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கமலின் மேக்கப் மிகவும் முக்கியம் என்பதால் ஷங்கர் வெளிநாட்டில் இருந்து ஆட்களை வரவழைக்க திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறாராம்.

அங்கு மேக்கப் டெஸ்ட் எடுத்து அது திருப்தியாக இருந்தால் அதன் பிறகு படப்பிடிப்பு துவங்குமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X