இந்தியன் 2 ஷூட்டிங்.. அடுத்த 20 நாட்களுக்கு எங்கு நடக்கப்போகிறது தெரியுமா?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு போபால் விரைந்துள்ளது.

Recommended Video

BIGG BOSS 3 : Indian-2 to Star Tharshan with Kamal Hassan : இந்தியன் 2 படத்தில் நடிக்கும் தர்ஷன்?

போபால்: 2.0 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இந்தியன் 2.

இந்தியன் படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து ஷங்கர் - கமல் கூட்டணி மீண்டும் இந்தியன் 2 படத்திற்காக இணைந்துள்ளது.

இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு போபால் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

90 வயது தாத்தா

90 வயது தாத்தா

இந்தியன் 2 படத்தில் 90 வயது சேனாபதி வேடத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். முதல் பாகத்தின் இறுதியில் மிகப்பெரிய விபத்தில் இருந்து சேனாபதி வெளிநாடுக்கு தப்பிச்சென்ற காட்சியில் இருந்து இந்தியன் 2 படம் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தனை நடிகர்களா?

இத்தனை நடிகர்களா?

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் எக்கச்சக்க நடிகர்கள் பட்டாளம் இணைந்துள்ளது. கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், வித்யூத் ஜமால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மேலும், முதல்முறையாக நடிகர் விவேக் இந்தியன் 2 படத்தின் மூலம் கமல்ஹாசனுடன் நடிக்க உள்ளார்.

பிரம்மாண்ட சண்டை காட்சி

பிரம்மாண்ட சண்டை காட்சி

இந்தியன் 2ம் பாகத்தின் முதல் ஷெட்யூல் சென்னையிலும், இரண்டாவது ஷெட்யூல் ராஜமுந்திரியிலும் படமாக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது பிரம்மாண்ட சண்டை காட்சி ஒன்றை படமாக்க போபாலுக்கு படக்குழு விரைந்துள்ளது. அங்கு 2000 துணை நடிகர்களுடன் நடைபெற உள்ள பிரம்மாண்ட சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளில் ஷூட்டிங்

வெளிநாடுகளில் ஷூட்டிங்

போபால் ஷூட்டிங் முடித்த கையுடன் தைவான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்தியன் 2ம் பாகத்தின் படப்பிடிப்பை நடத்த இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம்.

முதல் பாகத்தின் இறுதிக் காட்சியில் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற சேனாபதி அங்கு என்ன செய்தார் என்றும், மீண்டும் எப்படி இந்தியாவுக்கு வருகிறார் போன்ற காட்சிகள் அங்கு படமாக்கப்பட உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X