பா.ரஞ்சித் தயாரிக்கும் 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'.... படப்பிடிப்பு தொடக்கம்!

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

சென்னை : பா.ரஞ்சித் தயாரிக்கும் "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு" படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

தினேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தினை, இயக்குநர் பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்குகிறார். "தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்" மற்றும் "மகிழ்ச்சி" ஆகிய ஆல்பங்களின் இசையமைப்பாளர் தென்மா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். "கபாலி", " காலா" ஆகிய படங்களின் கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்தில் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் பணியாற்றுகிறார்.

Irandam ulaga porin kadaisi gundu shooting starts

சென்னையில் இன்று இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர். அட்டக்கத்தி படத்திற்கு பிறகு, இந்த படம் மூலம் பா.ரஞ்சித்துடன் நடிகர் தினேஷ் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார்.

Irandam ulaga porin kadaisi gundu shooting starts

பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரிக்கும் இரண்டாவது படம் இது. எனவே இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படமும் சமூக அரசியல் சார்ந்த கதை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Irandam ulaga porin kadaisi gundu shooting starts

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X