போட்டோக்கள் லீக்கான விவகாரம்... மாணவர்களுடன் தர்பார் படக்குழு மோதல்... கவலையில் முருகதாஸ்!
மும்பையில் தர்பார் படக்குழுவினர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மும்பை: மும்பையில் தர்பார் படக்குழுவினருக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முருகதாஸ் இயக்கதில் ரஜினி, நயன்தாரா நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கும் மாணவர்கள் சிலர், தங்களுடையே செல்போனில் எடுத்தப் புகைப்படங்கள் அடிக்கடி லீக்காகின.

படத்தின் புரோமோஷனுக்காக படக்குழுவே படங்களை கசியவிடுகிறதா என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால் படங்கள் லீக்காவதற்கு மாணவர்கள் தான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க மாணவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களுக்கும், படக்குழுவினர்களுக்கும் இடையில், மோதல் ஏற்பட்டதாக தகவலல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பை பார்க்க தடைவிதிக்கப்பட்டுள்ளதால், ஆத்திரமடைந்த மாணவர்கள், கல்லூரியின் மாடிக்கு சென்று படப்பிடிப்பு தளத்தை நோக்கி கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்துள்ள முருகதாஸ், படப்பிடிப்பை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிகிறது. கல்லூரி நிர்வாகம் எடுக்கும் முடிவின் அடிப்படையில் தர்பார் படப்பிடிப்பில் மாற்றம் ஏற்படும். சுமார் 3 மாதங்கள் மும்பையிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











