இளம் தெலுங்கு நடிகருக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா மேனன்.. பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

சென்னை : வீரா, தமிழ் படம் 2 உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா மேனனுக்கு ஹிப் ஹாப் ஆதியின் நான் சிரித்தால் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்று தந்துள்ளது.

தமிழைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னடத்திலும் பல திரைப்படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்து அங்கும் பிரபலமான நடிகையாக உள்ளார்.

நான் சிரித்தால் படத்திற்கு பிறகு இப்பொழுது தெலுங்கில் புதிய திரைப்படத்தில் பிரபல இளம் ஹீரோவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி இருக்க அதன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

நான் சிரித்தால்

நான் சிரித்தால்

சினிமாவில் ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ஐஸ்வர்யா மேனன் வீரா மற்றும் தமிழ் படம் 2 உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பில் அறிமுக இயக்குனர் ராணாவின் இயக்கத்தில் வெளியான நான் சிரித்தால் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறினார்.

கோபம் வந்தால் சிரிக்கின்ற வியாதி

கோபம் வந்தால் சிரிக்கின்ற வியாதி

பெரும் எதிர்பார்ப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான நான் சிரித்தால் திரைப்படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு கோபம் வந்தால் சிரிக்கின்ற வியாதி என்ற வித்தியாசமான கான்செப்ட் வைத்து இப்படம் உருவாகி இருந்தாலும் ரசிகர்களை அந்த அளவிற்கு கவரவில்லை. எனவே சுமாரான வெற்றியை மட்டுமே இப்படம் பெற்றது இருப்பினும் ஐஸ்வர்யாவின் நடிப்பு நடனம் கவர்ச்சி என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது.

Recommended Video

கதையை கேட்டுட்டு Gautham Menon சொன்னது | Director Mohan G | Rudra Thandavam | Filmibeat Tamil
நீண்ட இடைவெளிக்குப் இப்போது தெலுங்கில்

நீண்ட இடைவெளிக்குப் இப்போது தெலுங்கில்

நடிப்பு நடனம் மட்டுமல்லாமல் கவர்ச்சியிலும் தாறுமாறு செய்து வரும் ஐஸ்வர்யா மேனன் சமூக வலைதளங்களில் அடிக்கடி வெளிவரும் அதிக கவர்ச்சி புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. தமிழைத் தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது

படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது

தெலுங்கில் இளம் நடிகராக உள்ள நிகில் சித்தார்த்தா நடிக்கும் புதிய திரைப்படத்தை ரெட் சினிமா தயாரிக்க இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்து தெலுங்கிலும் அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தற்போது துவங்கி இருக்க அதன் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத் துறையிலும் ஐஸ்வர்யா மேனன் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X