தளபதி 64 ஷூட்டிங்கில் விஜய்சேதுபதி கலந்து கொண்டாரா? வைரலாகும் போட்டோவின் பின்னணி என்ன?

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தின் ஷூட்டிங் தற்போது கர்நாடகவில் உள்ள ஷிமோகா எனும் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய் தங்கியிருக்கும் ஹோட்டலை சுற்றி விஜய் ரசிகர்கள் தினமும் அவரை காண திரண்டு நிற்கும் புகைப்படங்களும், விஜய் அவர்களை சந்தித்து வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களும் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், விஜய்சேதுபதி தளபதி 64 ஷூட்டிங் ஸ்பாட்டில் கலந்து கொண்டுள்ளார் என்றும், அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பது போன்ற ஒரு புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், அது வதந்தி என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அது ஃபேக் நியூஸ்

தளபதி 64 படத்தில் விஜய்சேதுபதி கலந்து கொண்டுள்ளார் என்றும் அதன் புகைப்படம் இதுதான் என வைரலாகி வரும் புகைப்படம், தளபதி 64 படத்தில் இடம்பெற்றது கிடையாது என்றும், அது ஃபேக் நியூஸ் என்றும் விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எப்போ?

விஜய் - விஜய்சேதுபதி மோதும் சண்டைக் காட்சிகள் ஷிமோகாவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் முன்பு வெளியாகின. ஆனால், இதுவரை விஜய்சேதுபதி, தளபதி 64 ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை. மாமனிதன் ஷூட்டிங்கில் பிசியாக நடித்து வரும் விஜய்சேதுபதி இந்த மாத இறுதியில் ஷிமோகா ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பெரிய பட்டியல்

விஜய்சேதுபதிக்கு 2019ம் ஆண்டில் அதிகளவில் படங்கள் வெளியாகவில்லை. வெளியான சங்கத்தமிழன் படமும் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. ஆனால், 2020ம் ஆண்டில் விஜய்சேதுபதிக்கு மிகப்பெரிய ஆண்டாக அமையவுள்ளது. மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், கடைசி விவசாயி, தளபதி 64 மற்றும் அமீர்கானின் பாலிவுட் படம் என பல படங்கள் விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

விஜய்யுடன் யார் யார்?

விஜய்சேதுபதி இன்னும் ஷிமோகா ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாத நிலையில், ஷிமோகாவில் அப்போது விஜய்யுடன் யார் தான்பா நடிக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நடிகர் சாந்தனு மற்றும் நாயகி மாளவிகா மோகனன், டெல்லியைத் தொடர்ந்து ஷிமோகாவில் நடைபெறும் தளபதி 64 ஷூட்டிங்கில் இன்று முதல் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X