மலேசியாவில் நடனமாடிய யுவன்- தர்ஷிதா
ஜாக்கி படத்திற்காக நாயகன் யுவன், நாயகி தர்ஷிதா ஆகியோர் மலேசியா சென்று நடனமாடிவிட்டு வந்துள்ளனர்.
சாய் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக L.லாரன்ஸ், M.தன்ராஜ், C.V.தங்கவேல், K.L.சூர்யகுமார், நிப்பான்ஸ் பிரபாகர் ஆகியோர் இணைத்து தயாரிக்கும் படம் ஜாக்கி.
சாட்டை படத்தில் அறிமுகமான யுவன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தர்ஷிதா நடிக்கிறார்.
இவர்களுடன் நான்கடவுள் ராஜேந்திரன்,நளினி,ரவிபிரகாஷ், சேரன்ராஜ், கஞ்சாகருப்பு,வாசுவிக்ரம்,டான்ஸ்மாஸ்டர் தினா, ரிஷா, ரேகாஸ்ரீ,தளபதிதினேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கிராமத்து நாயகன்
கிராமத்தில் செய்த சின்ன தவறுகள் ஜாக்கியை திசை திருப்பியதால் வேலை தேடி சென்னைக்கு வருகிறான். வந்த இடத்தில் பெரிய தவறுகளை செய்து சூழ்நிலை கைதியாகிறான்.

அதிரடி ஆக்சன் கதை
அதிலிருந்து அவன் விடுபட்டானா? அவனுக்கு என்ன ஆனது? என்று அதிரடி ஆக்ஷன் கதையை காதல் மோதலுடன் சொல்லி இருக்கிறோம் என்றார் இயக்குநர்

நளினியின் நடனம்
படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நளினி ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். அதுவும் வளைகாப்பு விழாப்பாடலில் நளினி நடனமாடி இருக்கிறார் என்று இயக்குநர் கூறியுள்ளார்.

யுவன்- தர்ஷிதா
ஜாக்கி படத்தில் யுவன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தர்ஷிதா நடிக்கிறார்.

பிரபல நடிகர்கள்
இவர்களுடன் நான்கடவுள் ராஜேந்திரன்,நளினி,ரவிபிரகாஷ், சேரன்ராஜ், கஞ்சாகருப்பு,வாசுவிக்ரம்,டான்ஸ்மாஸ்டர் தினா, ரிஷா, ரேகாஸ்ரீ,தளபதிதினேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

தொழில் நுட்பக்கலைஞர்கள்
ஒளிப்பதிவு - ரவி இசை - ஸ்ரீகாந்த் தேவா எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ் பாடல்கள் - அறிவுமதி,ரவிஷங்கர் ,அண்ணாமலை நடனம் - தினா ,பாப்பி,ராதிகா, ஸ்டன்ட் - தளபதி தினேஷ் கலை - பி.ராஜு தயாரிப்பு மேற்பார்வை - S.M.சேகர் எழுதி இயக்குபவர் கோவை ரவிராஜன்

மலேசியாவில் பாடல்
இப்படத்தின் பாடல்காட்சிகள் மலேசியாவில் படமாக்கப் பட்டுள்ளது. "என் உயிரான ஜீவன் எனை நானே தேடும் நேரம் உனை நானாய் பார்த்தேனே" என்ற பாடல் காட்சி யுவன் - தர்ஷிதா ஆடிப்பட படமாக்கப் பட்டது.

காதல் படம்
இத்துடன் மூன்று பாடல் காட்சிகள் பத்து நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது.முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகிறது ஜாக்கி என்கிறார் படத்தின் இயக்குநர் கோவை. ரவிராஜன்.


Click it and Unblock the Notifications











