ஜாங்கோ படப்பிடிப்பு தள எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள் வெளியானது!
சென்னை: அறிமுக இயக்குனர் மதன் கார்த்திகேயன் இயக்கத்தில் டைம் ப்ளூ பாணியில் உருவாகியுள்ள திரைப்படம் ஜாங்கோ
சதீஷ்குமார், மிருணாளினி ரவி, கருணாகரன், தங்கதுரை உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்
இயக்குனர் சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள ஜாங்கோ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது

டைம் லூப் பாணியில்
தமிழ் சினிமா இப்பொழுது மெல்ல மெல்ல புதுப்புது கதைகளை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது அதற்கு தகுந்தார்போல் புது புது இயக்குனர்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டே வருகின்றனர் அந்த வகையில் இப்போது இயக்குனர் மதன் கார்த்திகேயன் தமிழ் சினிமாவிற்கு புதிய வரவாக அறிமுகமாக உள்ளார். தயாரிப்பாளரும் இயக்குனருமான சிவி குமார் தயாரிப்பில் டைம் லூப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் ஜாங்கோ

ஜாங்கோ
மிருணாளினி ரவி, கருணாகரன், தங்கதுரை, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீஸர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தியாவில் முதல் முறையாக டைம் லூப் பாணியில் உருவாகும் திரைப்படம் என்ற பெருமையை ஜாங்கோ பெற்றுள்ளது. இயக்குனரும் தயாரிப்பாளருமான சிவி குமாரின் திருமுருகன் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

ரிலீஸ் தேதி அறிவிக்கப் பட்டது.
ஒரே நாளில் நடக்கும் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நடக்கின்றவாறு முறையில் நடைபெறும் இந்த கதை இதுவரை தமிழ் ரசிகர்கள் கண்டிராத புது விதமான கதையாக இருக்கும் என படக்குழு அறிவித்திருந்தது . கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் அச்சம் காரணமாக திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டதால் திரைப்படமும் முன்னதாகவே வெளியாக அறிவிக்கப்பட்டு பின் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின் இப்பொழுது ரிலீஸ் தேதி அறிவிக்கப் பட்டது.

19ஆம் தேதி
இந்நிலையில் வரும் நவம்பர் 19ஆம் தேதி ஜாங்கோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. மிகவும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க உள்ள ஜாங்கோ படத்தில் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். டைம் லூப் கதைக்களமாக இல்லாமல் ஹாலிவுட் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையும் அமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

படப்பிடிப்பு தள எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள் வெளியானது
ஜாங்கோ குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது இந்த நிலையில் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இப்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் போதே ஜாங்கோ படத்தை பற்றி ரசிகர்கள் பாசிட்டிவாக பேசிக்கொண்டு இருக்க சர்ப்ரைஸ்ஸாக படக்குழு இப்பொழுது படப்பிடிப்பு தள புகைப்படங்களை வெளியிட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications











