மாடு மேய்க்க வர்றீங்களா? மாடு மேய்க்க வர்றீங்களா?இந்தப் பெயரில் கோலிவுட்டில் ஒரு படம் உருவாகிறது.தூள், கில்லி, ஏய் என்று தமிழ் வளர்ச்சிப் பாதையில், கோலிவுட் போய்க்கொண்டிருக்கும் நிலையில் மாடு மேய்க்க வர்றீங்களா என்ற தலைப்பு அவ்வளவுமோசம் இல்லை.படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் அட்டகாசமாகத்தான் இருக்கிறது, ஓம் திரைஊடகம்.இந்த வித்தியாசமான படத்தில் ஹீரோவாக நடிப்பவர் அருண் என்ற புதுமுகம். அச்சுஅசல் தமிழன் முகம். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஜாஸ்மின் என்ற அழகுமல்லிகை. படத்தை இயக்கப் போவது ஆறுமுகம் என்ற புதுமுகம்தான். படம் முழுக்கபுதுமுகங்களின் அணிவகுப்புதான்.சரி படத்துக்கு ஏங்க இப்படி ஒரு தலைப்பு என்று ஆறுமுகத்தைக் கேட்டால், ஏதேதோஆங்கிலப் படத் தலைப்புகளை வைப்பதை விட சுத்தத் தமிழில் பெயர் வைக்கலாமேஎன்று யோசித்தேன். இந்தத் தலைப்புதான் தோன்றியது.அதற்காக படத் தலைப்புக்கும், படத்திற்கும் சம்பந்தம் இருக்காது போல என்றுநினைத்து விடாதீர்கள். படம் படு வித்தியாசமாக இருக்கும். தலைப்புக்கேற்றவிளக்கம் படத்திலும் இருக்கும்.அனைவரையும் ஈர்க்கும் விதமாக புத்தம் புதிய கதையுடன் இப்படத்தை இயக்கிவருகிறேன் என்றார் ஆறுமுகம்.ஹீரோயின் ஜாஸ்மின் படு அழகு. புத்தம் புதிய மலரான இவர், இப்படத்தில்ஹீரோவுடன் தொட்டு நடிக்கும் காட்சிகள் மிக மிகக் குறைவாம். தூர நின்னேஹீரோவையும், படம் பார்க்கும் ரசிகர்களையும் இம்சிக்கப் போகிறாராம்.படத்தில் தேவையில்லாத கிளாமர் காட்சிகளை புகுத்தவில்லையாம் இயக்குனர்ஆறுமுகம். தமிழர்களுக்கு மிக அவசியமான ஒரு படம் சார் இது என்று நெஞ்சைதடவினார்.மதுரை சுற்று வட்டாரத்தில் படப்பிடின் பாதியை முடித்து விட்ட ஆறுமுகம் அடுத்துதிண்டுக்கல் பக்கமாக இடம் பெயர்ந்துள்ளார்.இப்படத்தில் வரும் ஹலோ மான்குட்டியே என்ற பாட்டு ரசிகர்களை ரொம்பக்கவருமாம். ஹீரோவும், ஹீரோயினும் செல்போனிலேயே பாடுவது போல இந்தப்பாட்டை சுட்டிருக்கிறார்களாம், அதுவும் எங்கே ஒட்டன்சத்திரத்தில் வைத்து.பாட்டுக்களையும், இசையையும் கோர்த்திருப்பவர் தாண்டவக்கோன்.ரொம்ப புதுசா இருக்கேப்பா!

By Staff

மாடு மேய்க்க வர்றீங்களா?

இந்தப் பெயரில் கோலிவுட்டில் ஒரு படம் உருவாகிறது.

தூள், கில்லி, ஏய் என்று தமிழ் வளர்ச்சிப் பாதையில், கோலிவுட் போய்க்கொண்டிருக்கும் நிலையில் மாடு மேய்க்க வர்றீங்களா என்ற தலைப்பு அவ்வளவுமோசம் இல்லை.

படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் அட்டகாசமாகத்தான் இருக்கிறது, ஓம் திரைஊடகம்.

இந்த வித்தியாசமான படத்தில் ஹீரோவாக நடிப்பவர் அருண் என்ற புதுமுகம். அச்சுஅசல் தமிழன் முகம். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஜாஸ்மின் என்ற அழகுமல்லிகை.


படத்தை இயக்கப் போவது ஆறுமுகம் என்ற புதுமுகம்தான். படம் முழுக்கபுதுமுகங்களின் அணிவகுப்புதான்.

சரி படத்துக்கு ஏங்க இப்படி ஒரு தலைப்பு என்று ஆறுமுகத்தைக் கேட்டால், ஏதேதோஆங்கிலப் படத் தலைப்புகளை வைப்பதை விட சுத்தத் தமிழில் பெயர் வைக்கலாமேஎன்று யோசித்தேன். இந்தத் தலைப்புதான் தோன்றியது.

அதற்காக படத் தலைப்புக்கும், படத்திற்கும் சம்பந்தம் இருக்காது போல என்றுநினைத்து விடாதீர்கள். படம் படு வித்தியாசமாக இருக்கும். தலைப்புக்கேற்றவிளக்கம் படத்திலும் இருக்கும்.

அனைவரையும் ஈர்க்கும் விதமாக புத்தம் புதிய கதையுடன் இப்படத்தை இயக்கிவருகிறேன் என்றார் ஆறுமுகம்.

ஹீரோயின் ஜாஸ்மின் படு அழகு. புத்தம் புதிய மலரான இவர், இப்படத்தில்ஹீரோவுடன் தொட்டு நடிக்கும் காட்சிகள் மிக மிகக் குறைவாம். தூர நின்னேஹீரோவையும், படம் பார்க்கும் ரசிகர்களையும் இம்சிக்கப் போகிறாராம்.

படத்தில் தேவையில்லாத கிளாமர் காட்சிகளை புகுத்தவில்லையாம் இயக்குனர்ஆறுமுகம். தமிழர்களுக்கு மிக அவசியமான ஒரு படம் சார் இது என்று நெஞ்சைதடவினார்.

மதுரை சுற்று வட்டாரத்தில் படப்பிடின் பாதியை முடித்து விட்ட ஆறுமுகம் அடுத்துதிண்டுக்கல் பக்கமாக இடம் பெயர்ந்துள்ளார்.

இப்படத்தில் வரும் ஹலோ மான்குட்டியே என்ற பாட்டு ரசிகர்களை ரொம்பக்கவருமாம். ஹீரோவும், ஹீரோயினும் செல்போனிலேயே பாடுவது போல இந்தப்பாட்டை சுட்டிருக்கிறார்களாம், அதுவும் எங்கே ஒட்டன்சத்திரத்தில் வைத்து.

பாட்டுக்களையும், இசையையும் கோர்த்திருப்பவர் தாண்டவக்கோன்.

ரொம்ப புதுசா இருக்கேப்பா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X