»   »  சினிமாவில் சிவகாசி ஜெயலட்சுமி;கிளாமராக நடிக்கிறார்!

சினிமாவில் சிவகாசி ஜெயலட்சுமி;கிளாமராக நடிக்கிறார்!

Subscribe to Oneindia Tamil

தென் மாவட்ட காவல்துறையை கலக்கி, பின்னர் தானே பல வழக்குகளில் சிக்கிக் கொண்டு பரிதவித்த சிவகாசி ஜெயலட்சுமி பழனியப்பா கல்லூரி படத்தில் கிளாமரான கேரக்டரில் நடிக்கிறாராம்.

ஏட்டு முதல் எஸ்.பி. வரை பல காவலர்களை தனது வலையில் வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் சிவகாசி ஜெயலட்சுமி. பின்னர் பல மோசடி வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டன. இதற்காக சிறைக்கும் சென்றார் சிவகாசி ஜெயலட்சுமி.

இந்த நிலையில், சிவகாசி ஜெயலட்சுமி தற்போது சினிமாவில் நடிக்கிறார். அன்பாலயா பிரபாகரன் தயாரிக்கும் பழனியப்பா கல்லூரி படத்தில் சிவகாசி ஜெயலட்சுமிக்கு கிளாமரான வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

படத்தில் டீக்கடை நடத்துபவராக வருகிறார் ஜெயலட்சுமி. படு கிளாமரான டிரஸ் அணிந்து நடிக்கும் ஜெயலட்சுமி, இந்தக் காட்சியின் படப்பிடிப்புக்காக தற்போது மயிலாடுதுறையில் முகாமிட்டுள்ளார்.

படத்தில் வரும் பழனியப்பா கல்லூரி வாசலில் டீக்கடை நடத்துகிறார் சிவகாசி ஜெயலட்சுமி. கவர்ச்சியான தோற்றத்தில் டீக்கடையில் இருக்கும் ஜெயலட்சுமியை மாணவர்கள் டீஸ் செய்து கிண்டலடிக்கிறார்கள்.

இந்தக் காட்சியை படமாக்கினர். வெளியில் வைத்து இந்தக் காட்சியைப் படமாக்கினால் கூட்டம் கூடி விடும் என்பதால் ஜெயலட்சுமி தங்கியுள்ள ஹோட்டலின் மொட்டை மாடியில் டீக்கடை செட் போட்டு படமாக்கினார்களாம்.

ஜெயலட்சுமி, இப்படத்தோடு நடிப்புக்கு மூட்டை கட்டுவாரா அல்லது தொடருவாரா என்பது தெரியவில்லை.

விரைவிலேயே குத்துப் பாட்டில் யாராவது ஜெயலட்சுமியை ஒற்றைப் பாட்டுக்கு ஆட விட்டாலும் விடலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil