twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜீவா பட ஷூட்டிங்குக்குத் தடை

    By Staff
    |

    ஜீவா, பாவனா நடிக்கும் ராமேஸ்வரம் படத்தின் ஷூட்டிங்கை மண்டபம் அகதிகள் முகாமில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இலங்கைத் தமிழ் அகதியாக ஜீவா நடிக்கும் படம் ராமேஸ்வரம். அவருக்கு ஜோடியாக பாவனா நடிக்கிறார். உள்ளூர் ரவுடியின் மகளாக பாவனா வருகிறார். செல்வம் இப்படத்தை இயக்குகிறார்.

    பெரும்பாலான படப்பிடிப்பு ராமேஸ்வரம் சுற்றுப் பகுதிகளில் நடக்கிறது. மண்டபம் அகதிகள் முகாமிலும் படப்பிடிப்பை நடத்த இயக்குநர் விரும்பினார்.

    இதுதொடர்பாக உரிய அதிகாரிகளை அணுகினார். ஆனால் அகதிகள் முகாமுக்குள் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் கூறி விட்டனர். இதையடுத்து தற்போது செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி வருகின்றனராம்.

    ராமேஸ்வரத்தில் அகதிகள் முகாம் போல போடப்பட்ட செட்டில், பாவனா, ஜீவா சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர். படப்பிடிப்பின்போது பெருமளவில் ரசிகர்கள் திரண்டு விட்டதால் படப்பிடிப்பை நடத்த முடியாமல் ஜீவா உள்ளிட்டோர் ஹோட்டலுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டனராம்.

    கூடுதல் பாதுகாப்போடு படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வருகின்றார் இயக்குநர் செல்வம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X