ஷூட்டிங்கில் ஜீவன் காயம்
மச்சக்காரன் படப்பிடிப்பின்போது நடிகர் ஜீவன் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
நான் அவனில்லை படத்தில் ஐந்து ஹீரோயின்களுடன் கலக்கலாக நடித்த ஜீவன் அடுத்து மச்சக்காரன் படத்தில் நடித்து வருகிறார். இதிலும் இவருக்கு ரோமியோ டைர் ரோல்தானாம்.ஜீவனுக்கு ஜோடியாக காம்னா நடிக்கிறார். தமிழ்வாணன் படத்தை இயக்கி வருகிறார். மச்சக்காரன் படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள மணி மஹால் என்ற இடத்தில் நடந்தது.
காவல் நிலையம் போல செட் போட்டு ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினர். ஏணியில் நின்றபடி ஜீவன் வில்லனின் அடியாட்களுடன் சண்டை போடுவது போன்ற காட்சி அது.
அப்போது திடீரென ஏணியிலிருந்து தவறி கீழே விழுந்தார் ஜீவன். இதில் அவருக்கு தலையில் நல்ல அடி விழுந்தது. இடது காலிலும் அடிபட்டது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர் வீடு திரும்பினார் ஜீவன்.
More from Filmibeat
actor காம்னா ஜீவன் தமிழ்வாணன் நிறுத்தம் படப்பிடிப்பு படுகாயம் மச்சக்காரன் hero injure jeevan kamna kollywood machakaran naan avanillai spot tamilvannan


Click it and Unblock the Notifications











