இரண்டாக பிரிந்த 'ஜில்லா' படக்குழு: சென்னையில் டூயட், மதுரையில் சண்டை
சென்னை: ஜில்லா படக்குழு இரண்டாக பிரிந்து ஒரே நேரத்தில் மதுரை மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது.
நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் ஜில்லா படத்தின் ஹைதராபாத் ஷெட்யூல் முடிந்துவிட்டது. இதையடுத்து சென்னை திரும்பிய படக்குழு தீபாவளி முடிந்தவுடன் அடுத்த ஷெட்யூலுக்கு கிளம்பிவிட்டது.
ஜில்லா படக்குழு இரண்டாக பிரிந்து சென்றுள்ளது.

சென்னையில் டூயட்
சென்னையில் விஜய், காஜல் அகர்வால் நடனமாடும் பாடல் காட்சியை படமாக்குகிறார்கள். இந்த பாடலுக்கு ராஜு சுந்தரம் நடனம் அமைக்கிறார். ஜில்லாவின் அதிகாரப்பூர்வ ஒளிப்பதிவாளரான கணேஷ் சென்னை படப்பிடிப்பை கவனிக்கிறார்.

மதுரையில் சண்டை
மதுரை சென்றுள்ள படக்குழு சண்டை காட்சியை படமாக்குகிறது. இதை ஒளிப்பதிவாளர் பிரியன் கவனித்துக் கொள்கிறார். ஒரே நேரத்தில் மதுரை, சென்னை என இரண்டு இடங்களில் இன்று முதல் படப்பிடிப்பு நடக்கிறது.

ஜப்பானில் பாடல்
அண்மையில் தான் ஜில்லா படக்குழு ஜப்பானுக்கு சென்று ஒரு பாடல் காட்சியை 4 நாட்களாக படமாக்கிவிட்டு திரும்பி வந்துள்ளது.

விஜய் பாட்டு
ஜில்லா படத்தில் விஜய் பாடியுள்ள கண்டாங்கி கண்டாங்கி பாடல் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











