ஜான் ஆபிரகாம் மூக்கை வெத்தலை போட வைத்த ஜூனியர் ஆர்டிஸ்ட்
பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமின் மூக்கைச் சேர்த்து ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் குத்திவிட்டார். இதனால் ஜானின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது.
பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் சஞ்சய் குப்தாவின் ஷூட்அவுட் அட் வாதாலா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். அதில் அவரை ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவர் மூக்கில் குத்துவது போன்ற காட்சி உள்ளது. அதற்காக அந்த நபரிடம் ஜானின் மூக்கில் மெதுவாக குத்துங்கள், குத்துவது போன்று செய்தால் கூட போதும் என்று இயக்குனர் கூறியுள்ளார். அவரும் தலையசைத்துவிட்டு சென்றுள்ளார்.
என்ன கடுப்போ, என்னவோ கேமராவை ஸ்டார்ட் செய்ததும் அந்த ஜூனியர் நடிகர் ஜானின் மூக்கைச் சோ்த்து ஓங்கி குத்திவிட்டார். வலி தாங்க முடியாமல் ஜான் மூக்கைப் பிடித்தார். கையை எடுத்துப் பார்த்தால் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து மூக்கு எலும்பு எதுவும் உடைந்திருக்கிறதா என்று பார்க்க உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications












