»   »  மீண்டும் சூர்யா-ஜோதிகா ஜோடி ஜோதிகாவும், சூர்யாவும் ஜோடி சேரப் போகின்றனர். மாயாவிக்குப் பின் இருவரும் இணையும் படம் இது. இந்தப் படத்தையும்மாயாவி இயக்குனர் சிங்கம்புலி தான் டைரக்ட் செய்யப் போகிறார்.ஜோதிகா, சூர்யா திருமணம் செய்யப் போவது உறுதி தான் என்கிறார்கள். தந்தை சிவக்குமாரின் எதிர்ப்புத் தொடர்ந்தாலும், தனதுதங்கையின் திருமணத்துக்குப் பின் ஜோதிகாவைக் கரம் பிடிப்பதில் சூர்யா தீவிரமாகவே உள்ளார்.வீட்டில் எதிர்ப்பு காரணமாக, சூர்யா-ஜோவுக்கு இடையிலும், அவ்வப்போது ஊடல்களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.ஆனாலும் இந்த இருவரின் ஆழ்ந்த நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.இதுவரை 5 படங்களில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடித்திருந்தாலும் காக்க.. காக்கவில் அவர்களுக்கு இடையே ஏதோஒரு சினிமா தாண்டிய பந்தம் தெரிந்தது. அதே போல மாயாவியில் இருவருமே நன்றாக நடித்தாலும் படம் நல்லபடியாகபோகாவில்லை.ஆனால், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவுக்கும், நிழல் தயாரிப்பாளரான இயக்குனர் பாலாவுக்கும் கையைக்கடிக்கவில்லையாம். பாலாவின் உதவியாளராக இருந்து இயக்குனரான சிங்கம்புலி, தனது அடுத்த ப்ராஜெக்டுக்குத்தயாராகிவிட்டார்.அதிலும் சூர்யாவையே நடிக்க வைக்க சிங்கம்புலி விரும்பினாராம். பாலா கூப்பிட்டுப் பேசவே சூர்யா ஒப்புக் கொண்டுவிட்டார்.ஹீரோயினாக ஜோதிகாவையே போடுவது என்றும் முடிவு செய்துவிட்டார்கள்.கஜினி படத்தை முடித்துவிட்டு இந்தப் படத்தில் சூர்யா நடிக்கலாம் என்கிறார்கள்.கல்யாணம் எல்லாம் இப்போ இல்லை என சமீபத்தில் பேட்டி தந்த சூர்யா, ஜோதிகாவின் பிறந்த நாளுக்கு முக்கியவிருந்தினர்களை தானே நேரில் சென்று அழைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அடிப்படையில் மகா வெட்கப்பார்ட்டியான சூர்யா, வெளிப்படையாக ஜோவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார்.இது பற்றி ஜோதிகாவிடம் கேட்டால்,அதில் என்ன தவறு இருக்கிறது? எல்லோரையும் நேரில் சென்று அழைக்க எனக்கு நேரம் இல்லை. இதனால் நான் சூர்யாவிடம்உதவி கேட்டேன். அவரும் தயங்காமல் எனக்கு உதவி செய்தார்.நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். நண்பர்களுக்குள் பரஸ்பரம் உதவுவது தவறா? இப்போது கூட கஜினி படத்தில் சூர்யா இடதுகைப்பழக்கம் உள்ளவரா நடிக்கிறார். எனக்கு அடிப்படையிலேயே இடது கைப்பழக்கம் என்பதால் அவர் என்னிடம் சிலஐடியாக்களை கேட்டார்.நானும் சொன்னேன். என்னுடைய சில ஐடியாக்களையும் கஜினி படத்தில் சூர்யா பயன்படுத்தியுள்ளார். நல்ல நண்பர்கள் என்றால்இப்படி ஒருவருக்கொருவர் உதவுவது சகஜம் தானே.இதுவரை இருவரும் சேர்ந்து 5 படங்களில் நடித்து விட்டோம். இதனால் நாங்கள் ராசியான ஜோடியாகி விட்டதாகபத்திரிகைகளில் எழுதினார்கள். படத்தில் ராசியான ஜோடி வாழ்க்கையிலும் ஜோடியாகப் போவதாக சில பத்திரிகைகளில்எழுதினார்கள்? யார், யாருக்குன்னு விதி எப்படி இருக்கோ அப்படித்தான் நடக்கும்.திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம்? இன்னும் 2 வருடம் போகட்டுமே. ஆனால் யாரை திருமணம் செய்வேன் என்று கூறமாட்டேன். அது சஸ்பென்ஸ் என்றார் கண்களை சந்திரமுகி ஸ்டைலில் உருட்டிய படி.உங்களைப் பற்றி கிசு கிசுக்கள் அதிகமாக வருகிறதே என்று கேட்டால், அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படுவது கிடையாது.அதையே நினைச்சிக்கிட்டு நேரத்தை வீணடிக்கிறதும், மனதை காயப்படுத்துறதும் எனக்குப் பிடிக்காது என்று பதில் வருகிறதுஜோதிகாவிடமிருந்து.என் மேல் அன்பு காட்டும் தமிழ் மக்களுக்கு நான் நிறையவே கடமைப்பட்டிருக்கிறேன் என்கிறார் ஜோதிகா.

மீண்டும் சூர்யா-ஜோதிகா ஜோடி ஜோதிகாவும், சூர்யாவும் ஜோடி சேரப் போகின்றனர். மாயாவிக்குப் பின் இருவரும் இணையும் படம் இது. இந்தப் படத்தையும்மாயாவி இயக்குனர் சிங்கம்புலி தான் டைரக்ட் செய்யப் போகிறார்.ஜோதிகா, சூர்யா திருமணம் செய்யப் போவது உறுதி தான் என்கிறார்கள். தந்தை சிவக்குமாரின் எதிர்ப்புத் தொடர்ந்தாலும், தனதுதங்கையின் திருமணத்துக்குப் பின் ஜோதிகாவைக் கரம் பிடிப்பதில் சூர்யா தீவிரமாகவே உள்ளார்.வீட்டில் எதிர்ப்பு காரணமாக, சூர்யா-ஜோவுக்கு இடையிலும், அவ்வப்போது ஊடல்களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.ஆனாலும் இந்த இருவரின் ஆழ்ந்த நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.இதுவரை 5 படங்களில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடித்திருந்தாலும் காக்க.. காக்கவில் அவர்களுக்கு இடையே ஏதோஒரு சினிமா தாண்டிய பந்தம் தெரிந்தது. அதே போல மாயாவியில் இருவருமே நன்றாக நடித்தாலும் படம் நல்லபடியாகபோகாவில்லை.ஆனால், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவுக்கும், நிழல் தயாரிப்பாளரான இயக்குனர் பாலாவுக்கும் கையைக்கடிக்கவில்லையாம். பாலாவின் உதவியாளராக இருந்து இயக்குனரான சிங்கம்புலி, தனது அடுத்த ப்ராஜெக்டுக்குத்தயாராகிவிட்டார்.அதிலும் சூர்யாவையே நடிக்க வைக்க சிங்கம்புலி விரும்பினாராம். பாலா கூப்பிட்டுப் பேசவே சூர்யா ஒப்புக் கொண்டுவிட்டார்.ஹீரோயினாக ஜோதிகாவையே போடுவது என்றும் முடிவு செய்துவிட்டார்கள்.கஜினி படத்தை முடித்துவிட்டு இந்தப் படத்தில் சூர்யா நடிக்கலாம் என்கிறார்கள்.கல்யாணம் எல்லாம் இப்போ இல்லை என சமீபத்தில் பேட்டி தந்த சூர்யா, ஜோதிகாவின் பிறந்த நாளுக்கு முக்கியவிருந்தினர்களை தானே நேரில் சென்று அழைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அடிப்படையில் மகா வெட்கப்பார்ட்டியான சூர்யா, வெளிப்படையாக ஜோவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார்.இது பற்றி ஜோதிகாவிடம் கேட்டால்,அதில் என்ன தவறு இருக்கிறது? எல்லோரையும் நேரில் சென்று அழைக்க எனக்கு நேரம் இல்லை. இதனால் நான் சூர்யாவிடம்உதவி கேட்டேன். அவரும் தயங்காமல் எனக்கு உதவி செய்தார்.நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். நண்பர்களுக்குள் பரஸ்பரம் உதவுவது தவறா? இப்போது கூட கஜினி படத்தில் சூர்யா இடதுகைப்பழக்கம் உள்ளவரா நடிக்கிறார். எனக்கு அடிப்படையிலேயே இடது கைப்பழக்கம் என்பதால் அவர் என்னிடம் சிலஐடியாக்களை கேட்டார்.நானும் சொன்னேன். என்னுடைய சில ஐடியாக்களையும் கஜினி படத்தில் சூர்யா பயன்படுத்தியுள்ளார். நல்ல நண்பர்கள் என்றால்இப்படி ஒருவருக்கொருவர் உதவுவது சகஜம் தானே.இதுவரை இருவரும் சேர்ந்து 5 படங்களில் நடித்து விட்டோம். இதனால் நாங்கள் ராசியான ஜோடியாகி விட்டதாகபத்திரிகைகளில் எழுதினார்கள். படத்தில் ராசியான ஜோடி வாழ்க்கையிலும் ஜோடியாகப் போவதாக சில பத்திரிகைகளில்எழுதினார்கள்? யார், யாருக்குன்னு விதி எப்படி இருக்கோ அப்படித்தான் நடக்கும்.திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம்? இன்னும் 2 வருடம் போகட்டுமே. ஆனால் யாரை திருமணம் செய்வேன் என்று கூறமாட்டேன். அது சஸ்பென்ஸ் என்றார் கண்களை சந்திரமுகி ஸ்டைலில் உருட்டிய படி.உங்களைப் பற்றி கிசு கிசுக்கள் அதிகமாக வருகிறதே என்று கேட்டால், அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படுவது கிடையாது.அதையே நினைச்சிக்கிட்டு நேரத்தை வீணடிக்கிறதும், மனதை காயப்படுத்துறதும் எனக்குப் பிடிக்காது என்று பதில் வருகிறதுஜோதிகாவிடமிருந்து.என் மேல் அன்பு காட்டும் தமிழ் மக்களுக்கு நான் நிறையவே கடமைப்பட்டிருக்கிறேன் என்கிறார் ஜோதிகா.

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜோதிகாவும், சூர்யாவும் ஜோடி சேரப் போகின்றனர். மாயாவிக்குப் பின் இருவரும் இணையும் படம் இது. இந்தப் படத்தையும்மாயாவி இயக்குனர் சிங்கம்புலி தான் டைரக்ட் செய்யப் போகிறார்.

ஜோதிகா, சூர்யா திருமணம் செய்யப் போவது உறுதி தான் என்கிறார்கள். தந்தை சிவக்குமாரின் எதிர்ப்புத் தொடர்ந்தாலும், தனதுதங்கையின் திருமணத்துக்குப் பின் ஜோதிகாவைக் கரம் பிடிப்பதில் சூர்யா தீவிரமாகவே உள்ளார்.

வீட்டில் எதிர்ப்பு காரணமாக, சூர்யா-ஜோவுக்கு இடையிலும், அவ்வப்போது ஊடல்களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.ஆனாலும் இந்த இருவரின் ஆழ்ந்த நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதுவரை 5 படங்களில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடித்திருந்தாலும் காக்க.. காக்கவில் அவர்களுக்கு இடையே ஏதோஒரு சினிமா தாண்டிய பந்தம் தெரிந்தது. அதே போல மாயாவியில் இருவருமே நன்றாக நடித்தாலும் படம் நல்லபடியாகபோகாவில்லை.

ஆனால், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவுக்கும், நிழல் தயாரிப்பாளரான இயக்குனர் பாலாவுக்கும் கையைக்கடிக்கவில்லையாம். பாலாவின் உதவியாளராக இருந்து இயக்குனரான சிங்கம்புலி, தனது அடுத்த ப்ராஜெக்டுக்குத்தயாராகிவிட்டார்.

அதிலும் சூர்யாவையே நடிக்க வைக்க சிங்கம்புலி விரும்பினாராம். பாலா கூப்பிட்டுப் பேசவே சூர்யா ஒப்புக் கொண்டுவிட்டார்.ஹீரோயினாக ஜோதிகாவையே போடுவது என்றும் முடிவு செய்துவிட்டார்கள்.

கஜினி படத்தை முடித்துவிட்டு இந்தப் படத்தில் சூர்யா நடிக்கலாம் என்கிறார்கள்.

கல்யாணம் எல்லாம் இப்போ இல்லை என சமீபத்தில் பேட்டி தந்த சூர்யா, ஜோதிகாவின் பிறந்த நாளுக்கு முக்கியவிருந்தினர்களை தானே நேரில் சென்று அழைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அடிப்படையில் மகா வெட்கப்பார்ட்டியான சூர்யா, வெளிப்படையாக ஜோவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார்.


இது பற்றி ஜோதிகாவிடம் கேட்டால்,

அதில் என்ன தவறு இருக்கிறது? எல்லோரையும் நேரில் சென்று அழைக்க எனக்கு நேரம் இல்லை. இதனால் நான் சூர்யாவிடம்உதவி கேட்டேன். அவரும் தயங்காமல் எனக்கு உதவி செய்தார்.

நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். நண்பர்களுக்குள் பரஸ்பரம் உதவுவது தவறா? இப்போது கூட கஜினி படத்தில் சூர்யா இடதுகைப்பழக்கம் உள்ளவரா நடிக்கிறார். எனக்கு அடிப்படையிலேயே இடது கைப்பழக்கம் என்பதால் அவர் என்னிடம் சிலஐடியாக்களை கேட்டார்.

நானும் சொன்னேன். என்னுடைய சில ஐடியாக்களையும் கஜினி படத்தில் சூர்யா பயன்படுத்தியுள்ளார். நல்ல நண்பர்கள் என்றால்இப்படி ஒருவருக்கொருவர் உதவுவது சகஜம் தானே.

இதுவரை இருவரும் சேர்ந்து 5 படங்களில் நடித்து விட்டோம். இதனால் நாங்கள் ராசியான ஜோடியாகி விட்டதாகபத்திரிகைகளில் எழுதினார்கள். படத்தில் ராசியான ஜோடி வாழ்க்கையிலும் ஜோடியாகப் போவதாக சில பத்திரிகைகளில்எழுதினார்கள்? யார், யாருக்குன்னு விதி எப்படி இருக்கோ அப்படித்தான் நடக்கும்.

திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம்? இன்னும் 2 வருடம் போகட்டுமே. ஆனால் யாரை திருமணம் செய்வேன் என்று கூறமாட்டேன். அது சஸ்பென்ஸ் என்றார் கண்களை சந்திரமுகி ஸ்டைலில் உருட்டிய படி.

உங்களைப் பற்றி கிசு கிசுக்கள் அதிகமாக வருகிறதே என்று கேட்டால், அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படுவது கிடையாது.அதையே நினைச்சிக்கிட்டு நேரத்தை வீணடிக்கிறதும், மனதை காயப்படுத்துறதும் எனக்குப் பிடிக்காது என்று பதில் வருகிறதுஜோதிகாவிடமிருந்து.

என் மேல் அன்பு காட்டும் தமிழ் மக்களுக்கு நான் நிறையவே கடமைப்பட்டிருக்கிறேன் என்கிறார் ஜோதிகா.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil