twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சில்லுன்னு... இப்போ இல்லாட்டி எப்போ என்று கேட்கப்பட்டு வந்த சூர்யா, ஜோதிகா திருமணம்நடக்கப் பாகும் நாள் நெருங்க ஆரம்பித்து விட்டது. அப்பா சிவக்குமார்அஃபீஷியலாக அறிவிக்க வேண்டியதுமட்டும்தான் பாக்கி. கல்யாண ஜோரில் சில்லுன்னு ஒரு காதல் (முன்பு ஜில்லுன்னு...) படத்தை படுக்யூட்டாக நடித்து முடித்துள்ளார்களாம் ஜோதிகாவும், சூர்யாவும்.இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்புஏற்பட்டுவிட்டது. காரணம் படத்தின் பாடல்கள். படு அழகாக வந்துள்ளன அத்தனைப்பாடல்களும்.ரஹ்மான் தனது டிரேட் மார்க் ஜில்லிப்பை அத்தனை பாடல்களிலும் பாரபட்சமின்றிபதித்துள்ளார்.படத்தைப் பற்றிய பல சுவாரஸ்யமான செய்திகள் இப்போது வெளியாகஆரம்பித்துள்ளன. சூர்யாவின் சொந்தப் படம் (சொந்தக்காரர் எடுக்கும் படம்என்கிறார் சூர்யா) இது. ஜோவும் தயாரிப்பில் கூட்டாளி என்பது ரகசிய கிசுகிசு.ராஜமுந்திரியில் 2ம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாம். கோதாவரிஆற்றங்கரையோரம் சூர்யா, ஜோதிகா சம்பந்தப்பட்ட பல காட்சிகளை அருமையானசெட் போட்டு சுட்டுள்ளார்களாம்.சூர்யாவின் ஆந்திர ரசிகர்கள் (நன்றி: தெலுங்கு கஜினி) பெரும் கூட்டமாக வந்துபடப்பிடிப்பை ரசித்தார்களாம்.அத்தனை பேரிடமும் தனக்குத் தெரிந்த தெலுங்கில் மாட்லாடி அசத்தி ஆட்டோகிராப்போட்டுக் கொடுத்தாராம் சூர்யா. கூடவே ஜோவின் ஆட்டோகிராப்பையும் சேர்த்துவாங்கி புளகாங்கிதம் அடைந்தார்களாம் ரசிகர்கள்.இங்கு ஒரு பாடலை சூர்யா, ஜோதிகாவுடன் 1,300 துணை நடிகர், நடிகைகள் ஆடமயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் துணைக்கு வர படுஅட்டகாசமாக வந்துள்ளதாம் அந்தப் பாடல்.கிட்டத்தட்ட ஒருவாரமாக இந்தப் பாட்டை படம் பிடித்துள்ளனர். தெலுங்குப்படங்களுக்கே அனுமதி கொடுக்கப்படாத ஆந்திரா பல்கலைக்கழக வளாகத்தில்(1500 ஏக்கர் ஏரியாவாம்) சூர்யா- பூமிகா சம்பந்தப்பட்ட காட்சிகளைபடமாக்கியுள்ளனர்.500 மாடல்களுடன் சேர்ந்து சூர்யாவும், பூமிகாவும் இங்கு பூமி அதிர அருமையானபாடலுக்கும் நடனமாடினர். கோவையில் பிரமாண்டமான ஒரு கால்பந்துமைதானத்தை வடிவமைத்து அதிலும் 300 மாடல்கள், 500 எக்ஸ்ட்ராக்களுடன் சூர்யாஆட்டம் போட்டுள்ளதை படம் பிடித்தனராம்.கோவையில் உள்ள பழம்பெரும் பட்சிராஜா ஸ்டிடியோவில் ஒரு சண்டைக் காட்சியைபடு வித்தியாசமாக எடுத்துள்ளனர். சமீபத்தில் மறைந்த ஸ்டண்ட்மாஸ்டர் விக்ரம் தர்மாஅமைத்த கடைசி சண்டைக்காட்சி அதுதானாம்.கோவை பஸ் நலையம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ்பாதுகாப்புடன் சூர்யா, பூமிகா சம்பந்தபப்ட்ட காட்சிகளை படம் பிடித்தார்களாம்.ஜோதிகாவின் சொந்த ஊரான மும்பையையும் விடவில்லை. அங்குள்ள பலபகுதிகளில் சூர்யா, ஜோதிகா, பூமிகா சம்பந்தப்பட்ட சில காட்சிகளை படம்பிடித்துள்ளார்கள்.அந்த இடங்களை பரிந்துரைத்தது ஜோவாம்.இப்போது கிளைமாக்ஸ் காட்சி சென்னையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.இன்னும் ஒரேஒரு பாட்டை எடுக்க வேண்டியுள்ளதாம். அதற்காக சுவிட்சர்லாந்துக்குவிரைவில் பறக்கவுள்ளனர்.அதே நேரத்தில் ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்து விட்டார்களாம்(கல்யாணத்துக்கு தயாராக வேண்டுமே!).செப்டம்பருக்குள் படம் மொத்தமாக முடிந்து விடுமாம். கல்யாணத்தை ஒட்டி படத்தைரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு கல்யாண விருந்து கொடுக்க திட்டமாம்.வாழ்த்திட்டோம்ணேன்!

    By Staff
    |

    இப்போ இல்லாட்டி எப்போ என்று கேட்கப்பட்டு வந்த சூர்யா, ஜோதிகா திருமணம்நடக்கப் பாகும் நாள் நெருங்க ஆரம்பித்து விட்டது. அப்பா சிவக்குமார்அஃபீஷியலாக அறிவிக்க வேண்டியதுமட்டும்தான் பாக்கி.

    கல்யாண ஜோரில் சில்லுன்னு ஒரு காதல் (முன்பு ஜில்லுன்னு...) படத்தை படுக்யூட்டாக நடித்து முடித்துள்ளார்களாம் ஜோதிகாவும், சூர்யாவும்.

    இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்புஏற்பட்டுவிட்டது. காரணம் படத்தின் பாடல்கள். படு அழகாக வந்துள்ளன அத்தனைப்பாடல்களும்.

    ரஹ்மான் தனது டிரேட் மார்க் ஜில்லிப்பை அத்தனை பாடல்களிலும் பாரபட்சமின்றிபதித்துள்ளார்.

    படத்தைப் பற்றிய பல சுவாரஸ்யமான செய்திகள் இப்போது வெளியாகஆரம்பித்துள்ளன. சூர்யாவின் சொந்தப் படம் (சொந்தக்காரர் எடுக்கும் படம்என்கிறார் சூர்யா) இது. ஜோவும் தயாரிப்பில் கூட்டாளி என்பது ரகசிய கிசுகிசு.

    ராஜமுந்திரியில் 2ம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாம். கோதாவரிஆற்றங்கரையோரம் சூர்யா, ஜோதிகா சம்பந்தப்பட்ட பல காட்சிகளை அருமையானசெட் போட்டு சுட்டுள்ளார்களாம்.

    சூர்யாவின் ஆந்திர ரசிகர்கள் (நன்றி: தெலுங்கு கஜினி) பெரும் கூட்டமாக வந்துபடப்பிடிப்பை ரசித்தார்களாம்.

    அத்தனை பேரிடமும் தனக்குத் தெரிந்த தெலுங்கில் மாட்லாடி அசத்தி ஆட்டோகிராப்போட்டுக் கொடுத்தாராம் சூர்யா. கூடவே ஜோவின் ஆட்டோகிராப்பையும் சேர்த்துவாங்கி புளகாங்கிதம் அடைந்தார்களாம் ரசிகர்கள்.

    இங்கு ஒரு பாடலை சூர்யா, ஜோதிகாவுடன் 1,300 துணை நடிகர், நடிகைகள் ஆடமயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் துணைக்கு வர படுஅட்டகாசமாக வந்துள்ளதாம் அந்தப் பாடல்.

    கிட்டத்தட்ட ஒருவாரமாக இந்தப் பாட்டை படம் பிடித்துள்ளனர். தெலுங்குப்படங்களுக்கே அனுமதி கொடுக்கப்படாத ஆந்திரா பல்கலைக்கழக வளாகத்தில்(1500 ஏக்கர் ஏரியாவாம்) சூர்யா- பூமிகா சம்பந்தப்பட்ட காட்சிகளைபடமாக்கியுள்ளனர்.

    500 மாடல்களுடன் சேர்ந்து சூர்யாவும், பூமிகாவும் இங்கு பூமி அதிர அருமையானபாடலுக்கும் நடனமாடினர். கோவையில் பிரமாண்டமான ஒரு கால்பந்துமைதானத்தை வடிவமைத்து அதிலும் 300 மாடல்கள், 500 எக்ஸ்ட்ராக்களுடன் சூர்யாஆட்டம் போட்டுள்ளதை படம் பிடித்தனராம்.

    கோவையில் உள்ள பழம்பெரும் பட்சிராஜா ஸ்டிடியோவில் ஒரு சண்டைக் காட்சியைபடு வித்தியாசமாக எடுத்துள்ளனர். சமீபத்தில் மறைந்த ஸ்டண்ட்மாஸ்டர் விக்ரம் தர்மாஅமைத்த கடைசி சண்டைக்காட்சி அதுதானாம்.

    கோவை பஸ் நலையம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ்பாதுகாப்புடன் சூர்யா, பூமிகா சம்பந்தபப்ட்ட காட்சிகளை படம் பிடித்தார்களாம்.

    ஜோதிகாவின் சொந்த ஊரான மும்பையையும் விடவில்லை. அங்குள்ள பலபகுதிகளில் சூர்யா, ஜோதிகா, பூமிகா சம்பந்தப்பட்ட சில காட்சிகளை படம்பிடித்துள்ளார்கள்.

    அந்த இடங்களை பரிந்துரைத்தது ஜோவாம்.

    இப்போது கிளைமாக்ஸ் காட்சி சென்னையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.இன்னும் ஒரேஒரு பாட்டை எடுக்க வேண்டியுள்ளதாம். அதற்காக சுவிட்சர்லாந்துக்குவிரைவில் பறக்கவுள்ளனர்.

    அதே நேரத்தில் ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்து விட்டார்களாம்(கல்யாணத்துக்கு தயாராக வேண்டுமே!).

    செப்டம்பருக்குள் படம் மொத்தமாக முடிந்து விடுமாம். கல்யாணத்தை ஒட்டி படத்தைரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு கல்யாண விருந்து கொடுக்க திட்டமாம்.

    வாழ்த்திட்டோம்ணேன்!

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X